Breaking
Sun. Dec 22nd, 2024

கூர­க­லயில் ஜெய்­லானி பள்­ளி­வாசல் அமைந்­துள்ள பிர­தேசம் பௌத்­தர்­களின் புனி­த­பூ­மி­யாகும். இது எமது பூர்­வீக தொல்­பொருள் பிர­தே­ச­மாகும். நாட்­டி­லுள்ள தொல்­பொருள் சட்­டத்தைப் பயன்­ப­டுத்தி கூர­க­லயில் முஸ்­லிம்­களின் வணக்­கஸ்­தலம் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்­துள்ளார்.

கூர­கல விவ­காரம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில் ‘கூர­க­லயில் அமைந்­துள்ள முஸ்­லிம்­களின் வணக்க ஸ்தலம் இன்னும் இயங்­கி­வ­ரு­கி­றது. அப்­ப­கு­தி­யி­லுள்ள சட்­ட­வி­ரோத கட்­ட­டங்கள் அனைத்தும் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­டன.

முஸ்­லிம்­களின் வணக்­கஸ்­த­லத்­துக்கு பெளத்த புனித பூமிக்குள் நிலம் வழங்­கப்­ப­ட­வில்லை. இவ் வணக்­கஸ்­தலம் தொடர்ந்தும் இயங்கி வரு­கி­றது. நாட்டில் அமு­லி­லுள்ள தொல்­பொருள் சட்­டத்­தினால் இதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும்.

கூர­க­லயில் காணப்­படும் புரா­தன கல்­வெட்டில் அப்­பி­ர­தேசம் பௌத்த புனித பூமி­யென்றும் அதற்குள் சட்ட விரோ­த­மாக உட்­பி­ர­வே­சிப்­பதோ அழி­வு­களை ஏற்­ப­டுத்­து­வதோ தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகும் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆனால் இந்த அறி­வு­றுத்­தல்கள் இன்று மீறப்­பட்­டுள்­ளன. எனவே தொல்­பொருள் சட்­டங்­க­ளுக்கு அமை­வாக அவ்­வா­றா­ன­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும்.

முன்னாள் பிரதமர் ஆர்.பிரேமதாசவின் காலத்திலேயே கூரகலயில் முஸ்லிம் வணக்க ஸ்தலம் ஸ்தீரம் பெற்றது. இதற்கு அப்போதைய அமைச்சர் அபுசாலி உதவியாக இருந்தார் எனத் தெரிவித்தார்.

By

Related Post