Breaking
Mon. Dec 23rd, 2024
ரனில் இருக்கும் வரை ஐ.தே.க.யால் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியவர்களது மூற்றுக்களையும் ‘மகாரஜா’ என்றழைக்கப்பட்டவர்களது கூற்றுக்களையும், சிந்தித்தால் அரசியலின் வினோதங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்று தபால் துறை மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
மடவளை சந்தியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-
அரசியல் அரங்கு மிக வினோதமானது. அதில் எதுவும் நிச்சயமற்றது. ஒரு காலத்தில் இனி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது. அவர் இறுதி வரை ஆட்சியில் இருப்பார் என்று கருதியவர்களும் உண்டு. அவர்கள் மகிந்த ராஜபக்ஷ அவர்களை ‘மகா ரஜானனி’ (மகாராஜா)என்றே விழித்தனர். அதே நேரம் ரனில் விக்ரமசிங்க தலைவராக இருக்கும் வரை அவரால் ஆட்சி அமைக்க முடியாது என்றும் ஒரு சாரார் தெரிவித்தனர். இவ்விரு சாராரினதும் நிலைப்பாடு இன்று தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது.
வீழ்த்த முடியாதவர் என்று கூறப்பட்டவர் வீழ்த்தப்பட்டு விட்டார். வெற்றி அடைய முடியாது என்று கருதப்பட்டவர் ஆட்சி அமைத்து விட்டார். இது அரசியலில் நிலவும் வினோதங்கள். எனவே பொது மக்களாகிய உங்கள் சக்தி ஒன்றாகும் போது இப்படியான மாற்றங்கள் ஏற்படலாம்.
ஒருகாலத்தில் நாம் கேள்விப் பட்டுள்ளோம் எங்காவது ஓரிரு மில்லி கிராம் ஹெரோயின் அகப்பட்டதாகவும் அதனை வைத்திருந்தவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவுமே அறிந்துள்ளோம். ஆனால் கடந்த கால மகிந்த ஆட்சியில் என்ன நடந்தது. ஹெரோயின் போதைப் பொருள் கொள்கலன் வடிவில் ‘கன்டேனர் கணக்கில்’ கொண்டு வந்து குவிக்கப்பட்டது.
இதனால் ஏற்பட்ட தீய விளைவு எப்படி என்றால் எமது இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையாகி அவர்களது எதிர்கால வாழ்க்ககையே சூனியமாக்கப்பட்டுள்ளது.
நான் அமைச்சுப் பதவியேற்று சுமார் ஆறு மாதகாலமாகிறது. நான் அதனைப் பொறுப்பேற்க முன் வேறு சிலரிடத்திலேதான் முஸ்லிம் சமய விவகார அமச்சு இருந்தது. அதன் காரணமாக அதில் பல்வேறு குறைபாடுகளை அவதானிக்க முடிந்தது. அக்காலத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு ஏனோ தானோ என்றே நடத்தப்பட்டது. காரணம் அது வேறு ஒரு அமைச்சின் கீழ் இயங்கியது.
ஆனால் ரனில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு சிறுபான்மை இனங்களை கௌரவப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தனி ஒரு அமைச்சாக அது உருவாக்கப்பட்டது. அது மட்டுமல்ல, கடந்த காலங்களில் முஸ்லிம் பள்ளிகள் பல தாக்கப்பட்டன. அப்போது நாம் நீதி கேட்டுச் செல்லக் கூடிய கடைசி இடமாக நீதி மன்றங்கள் இருந்தன. அங்கே முன்வைக்கப்படும் ஒரே வாதம் தொடர்புடைய பள்ளி பதிவு செய்யப்பட்டதல்ல என்பதே. இதன் காரணமாக பள்ளிக்குறிய எந்த நீதி நியாயத்தையும் எம்மால் பெற்றுக் கொள்ள முடிய வில்லை.
பள்ளிகளைப் பதிவு செய்வதென்றால் அதற்கு அதிகளவு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. ஆனால் நான் அவ் அமைச்சை பொறுப்பேற்றதன் பின் பள்ளிகளைப் பதிவு செய்வது தொடர்பான நடைமுறைகளை இலகு படுத்தி தற்போது சுமார் 200 ற்கும் மேற்பட்ட பள்ளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முஸ்லிம் தர்ம் நிதியத்தைக் கையாளும் வக்பு சபையின் நடவடிக்கைகளை மாவட்டரீதியில் பரவலாக்க உள்ளோம். இதன் மூலம் அதன் பணிகளை மேற்கொள்வது இலகுவாக இருக்கும்.
ஹேரோயின் மற்றும் எத்தனோல் போன்ற போதைப் பொருற்களை சட்ட முரணான வகையில் இறக்குமதி செய்வதையே அரசு பிரதானமாகக் கொண்டிருந்தது. இதனால் குடு விற்பவர்களும் கள்ள சாராயம் விற்போருமே முன்னைய ஆட்சியில் பங்காளிகளாக இருந்தனர். அதனை நல்லாட்சி மாற்றி அமைத்துள்ளது.
நல்லாட்சியானது கடந்த 100 நாற்களில் செய்த சேவையைப் பார்க்கும் போது 60 மாதங்களில் அதனை விடப்பன்மடங்கு சேவை செய்யு; வாய்ப்பு உள்ளது.
எமது ஒவ்வொருவரதும் தனி வாக்குகள்மிகப் பெறுமதி மிக்கவை. ஆதனாற்தான் கடந்த ஜகவரி 8ம் திகதி இரத்தம் சிந்தாத புரட்சி ஒன்று ஏற்பட காரணமாக அமைந்தது.
‘மகாராஜா’ என்று விழிக்கப்பட்டவர் படுதோல்வி அடைந்தார். அதே நேரம் நாம் வாக்களிப்பில் பங்கு பற்றாது போனால் பாரிய விளைவுகள் ஏற்படலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அன்னப் பறவைக்கு வாக்களித்த 4 இலட்சம் பேர் வாக்களிக்காது இருந்திருந்தால் மகிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றிருப்பார். எனவே ஒவ்வொரு தனிவாக்கும் மிகப் பெறுமதியானது என்பதை மறக்க வேண்டாம்.
நான் எனது மாமனார் ஏ.சீ.எஸ்.ஹமீத் காலம் முதல் மடவளை மக்களுடன் மட்டுமல்லாது மத்திய மாகாண மக்கள் சகலரோடும் தொடர்பு பட்டிருந்தேன். அத்தகைய தொடர்பு என்றும் இருக்கும். என்னுடன் எப்போதும் தொடர்பு கொள்ள முடியும்.
எனவே சகல வாக்காளர்களும் இணைந்து ஹெரோயின் இறக்குதியாளர்களையும், எத்தனோல் இறக்குமதியாளர்களையும் அரசியல் அரங்கில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும். அதற்கு எதிராக உங்கள் வாக்குகளை அள்ளி வழங்கவும். நீங்கள் வெற்றிலைச் சின்னத்திற்கு வழங்கும் ஒவ்வொரு வாக்கும் எத்தனோல் மற்றும் குடுக்காரர்களுக்கு வழங்கும் அங்கீகாரமாகி விடும். முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் குடுக்காரர்களையும், எத்தனோல் போதை விற்பனையாளர்களையும் ஆதரிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அதேபோல் இன முரண்பாடுகளை ஏற்படுத்தி நாட்டில் துவேசத்தை வளர்ப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை ஒப்படைக்கவும் மாட்டீர்கள் என்பதும் தெரியும். எனவே எமது யானைச் சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
ஈழத்து பாலசுப்ரமணியம் என்றழைக்கப்படும் எம்.மொகமட் பலீல் வழங்கிய அரசியல் பாடல்களும் இவ்வைபவத்தில் இடம் பெற்றன.

Related Post