Breaking
Sun. Jan 12th, 2025
முஸ்லீம்களின் தனி மாவட்டக் கோரிக்கை ஒரு தனி நாட்டுக் கோரிக்கையாகக் கொள்ளக் கூடாது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
அம்பாறை முஸ்லிம்கள் தமது காரியங்களை தமது சொந்த மொழியிலேயே செய்துகொள்வதற்கு வசதியாக முஸ்லிம் காங்கிரஸினால், முன்வைக்கப்பட்ட இந்தக் கோரிக்கை ஒரு புதிய கோரிக்கை அல்ல
கிழக்கு மாகாண ஆட்சியமைப்பதற்கான நிபந்தனையாகக் கூட இதனை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஏற்றிருந்தது.
அனைத்து முஸ்லிம்களையும் தலிபான்களாகவும், அல்கைதாகவும் பள்ளிவாசல்களை பயங்கரவாதிகளை உருவாக்கும் நிலையங்களாகவும் பார்க்கும் ஒரு போக்கு பெரும்பான்மைக் கட்சிகளின் மத்தியில் வலுத்துள்ளது
இந்த விடயத்தில் முஸ்லிம் மக்கள் கொதித்துப் போய் இருக்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்
கிழக்கு மாகாணத்தில் கல்முனையை மையமாகக் கொண்டு கரையோரமாக வாழும் முஸ்லிம்களுக்கான தனியான மாவட்டம் ஒன்றை ஏற்படுத்தும் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையை, பிரதமர் திமு ஜயரட்ண நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post