Breaking
Sat. Jan 11th, 2025

– .எம்.எம்.ஏ.காதர் –

 முஸ்லீம்கள் தன்மானத்தோடு தலை நிமிர்ந்து உரிமைகளைப் பெறுகின்ற சமூகமாக இந்த மண்ணிலே வாழ்வதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழிவகுக்குமே தவிர சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சொல்வதைப் போல மக்களை அநாதைகளாக்குவதற்காக அல்ல.என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மருதமுனையில் கடந்த சனிக்கிழமை(25-07-2015)மாலை கிளை அலுவலகத்தைத் திறந்த வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதனைத் தெரிவித்தார்.

மருதமுனை வேட்பாளர் சித்தீக் நதீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும் தேசியப்பட்டியல் வேட்பாளருமான வை.எல்.எஸ்.ஹமீட்.தவிசாளர் எம்.எஸ்.அமீர் அலி மற்றறம் வேட்பாளர்கள் கலரும் கலந்து கொண்டனர்.

இங்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேலும் உரையாற்றுகையில் :-அம்பாறை மாவட்டத்திலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வருகை ஏனையவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. நாங்கள் வரவில்லையென்றால்தான் இந்த மாவட்ட மக்கள் அநாதைகளா ஆக்கப்பட்டிருப்பார்கள.;
அம்பாறை மாவட்டத்திலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டு புத்திசாதுரியம் இல்லாத கூட்டு. இந்தத் தேர்தலிலே அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியோடு சேர்ந்து போட்டியிட்டு மூன்று ஆசனங்களையும் பெரும்பான்மை இனத்திற்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கே இணைந்திருக்கின்றார்கள்.

அனால்தான் நாங்கள் அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் அநாதைகளாகி விடக்கூடாது என்பதற்காகவும,; அவர்களது பிரதிநிதிகளை இழந்து விடக்கூடாது என்பதற்காகவும் அவர்களைப் பாதுகாப்பதற்காக எமது கட்சிச் சின்னத்திலே சமூக அந்தஸ்துள்ள தகுதியானவர்கள் பத்துப்பேரை களமிறக்கி தனித்து துணிந்து போட்டியிடுகின்றோம்.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொடுக்கப்போகின்ற ஒரே ஒரு கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிதான் என்பதை மிகவும் உறுதியாகவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

18ம் திகதி தெரியும் அம்பாறை மாவட்டதிலே முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை முஸ்லிம் காங்கிரஸ் உதித்த இடம் முஸ்லிம் காங்கிரஸ்; தலைமத்தவத்தின் சாணக்கியம் இல்லாத முடிவினால் தனித்துக் கேட்பதற்கு தைரியம் இல்லாததனால் பாராளுமன்ற உறுப்பினர்களை இழக்கும் நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

முஸ்லிம் மக்கள் மீது போடப்பட்டிருந்த அடிமை விலங்கை மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் தகர்த்தெறிந்து முஸ்லிம் சமூகத்தை விடுவித்தார்.ஆனால் அவரின் மறைவுக்குப் பின் முஸ்லிம் சமூகம் தொடர்தும் பின்னடைவை நோக்கிச் செல்கின்றது.
.
இன்று ஏழைச் சமூகமாக கல்வியிலே பின்னடைந்த சமூகமாக மார்க்க விடையங்களைக் கூட பாதுகாக்க முடியாத சமூகமாக மாறிக் கொண்டிருக்கின்ற இந்த சமூகத்தின் மீது இன்று போடப்பட்டிருக்கின்ற அடிமைச்சங்கிலியை உடைத்தெறிவதற்காக அம்பாறை மாவட்டத்திலே சொந்தச் சின்னத்திலே களமிறங்கியிருக்கின்றது.ஆகவே அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் nதிவித்தார்.

Related Post