– பாரூக் சிஹான் –
முல்லைத்தீவு பகுதியில் காடழிக்கப்படுவது தொடர்பில் வட மாகாண சபை உறுப்பினர் கொண்டு வந்த பிரேரணை சக வட மாகாண சபை உறுப்பினர் ஜனுபரின் கூற்றினால் பிற்போடப்பட்டுள்ளது.
மாகாணசபையின் 37வது அமர்வு நேற்றைய தினம் காலை 9.30 மணிக்கு பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் ஆரம்பமாகி முழு நேர அமர்வாக மாலை 5 மணிவரையில் நடைபெற்றிருந்தது
முல்லைத்தீவு- குமுழமுனை குமாரபுரம் பகுதியில் திட்டமிட்ட குடியேற்றத்திற்காக பெருமளவு காடுகள் கேட்பார் இன்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தொடர்பாக அந்த மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் சபையில் பிரேரணை ஒன்றிணை முன்மொழிந்திருந்தார்.
இப்பிரேரணை மீதான கருத்துக்களை அதே மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஜனுபர் உரையாற்றினார்.
தொடர்ந்து ரவிகரன் இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவு எல்லைக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் சுமார் 600 ஏக்கர் வரையிலான காடுகள் திட்டமிட்டு அழிக்கப்படுவது தொடர்பாக அரசாங்க அதிகாரிகள் தமக்கு தெரியாது என கூறியிருக்கும் நிலையில் வடமாகாண காணி அமைச்சரும் முதலமைச்சருமா ன சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். என குறித்த பிரேரணையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும் மாவட்டச் செயலகத்திலிருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குறித்த காடழிப்பு தொடர்பாக அரசாங்க அதிபர் தனக்கு தெரியாது என்றால் 2616 சதுர கிலோமீற்றர் கொண்ட மாவட்டத்தை எப்படி நிர்வகிப்பார்கள் என கேள்வி எழுப்பியதுடன்இ எங்களுடைய மக்கள் சாதாரணமாக ஒரு தடி வெட்ட முடியாத நிலையில் உள்ள போது சுடுகாட்டில் சடலம் எரிப்பதற்கு மரம் இல்லாமல் இருக்கும் போது வேலிக்கு போட்ட கட்டைகளை கொண்டு சென்றவருக்கு 10ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்படும் நிலையில் 600 ஏக்கர் காடு எப்படி வெட்டப்பட்டது என கேள்வி எழுப்பியதுடன் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதற்கு நாம் தடைவிதிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் முறையாக மீள்குடியேறவேண்டும். என சபையில் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து மற்றய ஆளும் கட்சி மாகாணசபை உறுப்பினர்களும் இநத விடயத்தில் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சியில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் ஜனுபர் குறித்த விடயம் தொடர்பாக பதிலளிக்கையில் எங்களுடைய மக்கள் தங்கள் காணிகளையே துப்புரவு செய்தனர். ஆனால் அங்கு பற்றைகள் வளர்ந்திருந்தன அவற்றை வெட்டும் போது மரங்கள் சில வெட்டப்பட்டிருக்கலாம். என காடழிப்பு விடயம் ஏற்புடையதல்ல என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.