இலங்கை முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சனை குறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார உப செயலாளர் நாயகம் மிரோஸ்லாவ் ஜென்கா இதனை தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்ற வகையில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை செயலகத்துடன் தொடர்பு கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் ரிசாத் பதியுதீன் எழுதிய கடிதம் ஒன்றிற்கு பதில் வழங்கும் நோக்கிலேயே உப செயலாளர் நாயகம் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் முஸ்லீம்கள் எதிர்நோக்கிய பிரச்சனை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை தாம் மேற்கொண்டிருந்த போது, அரச அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமய தலைவர்கள், சிவில் சமூகத்தவர்கள் போன்றோருடன் உரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார்.