முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்கள் வாழ்ந்த முறிப்பு பிரதேசத்தில் மீளக்குடியேற சென்ற போது அவர்களுக்கு எதிராக அப்பட்டமான அபாண்டங்களை சுமத்தி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வேளையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் செய்கின்றனர் இது வண்மையான கண்டனத்துக்குரியதாகும் என்று பாராளுமன்ற த்தில் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த மக்களது மீள்குடியேற்றத்துக்கு உதவி செய்யாவட்டாலும்,உபத்திரமாவத செய்யாதீர்கள் என பகிரங்கமாக வேண்டுகோள்விடுத்தார்.
இன்று பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேலும் கூறுகையில் –
இன்று இந்த உயர் சபையில் எமது மக்களின் ஆதங்கத்தை தெரிவிக்க வாய்ப்புகிடைத்துள்ளது.இந்த சபையில் இருக்கின்ற எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன் அவர்களிடத்திலும்,16 தமிழ் கூட்டமைப்பு உறுப்பினர்களிடத்தில் கேட்கவிரும்புகின்றேன். நீங்கள் உங்களது மக்களுக்காக எதை கேட்டாலும் நாங்கள் அதற்கு ஒரு போதும் தடங்கள்களை ஏற்படுத்திய தில்லை.எதிர்கட்சி தலைவராக சம்பந்தன்அய்யா அவர்கள் தெரிவு செய்யப்பட்ட போது சிறுபான்மை சமூகத்தின் அதுவும் ஒரே மொழியினை பேசக் கூடியயொருவர் தெரிவு செய்யப்பட்டதை இந்த சபையில் நான் வாழத்தினேன்.ஏனெனில் எம்மிடத்தில் இனவாத சிந்தணைகள் இருந்ததில்லை.ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பி்னர்களும்,வடமாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரான ரவிகரன் என்பவர் உள்ளிட்டோர் முறிப்பு காணி தொடர்பில் அபாண்டத்தையும்,அநியாயத்தையும் பேசி முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றதை தடுக்கின்றனர்.ஏன் இந்த அநியாயத்தை இவர்கள் செய்கின்றார்.
சிறுபான்மை சமூகத்தின் விடுதலைக்காக போராடுபவர்கள் என்று தங்களை மார்தட்டிக் கொள்ளும் இந்த நபர்களின் பின்புலம் என்னவென்று நாம் அறிவோம்.இவர்களின் இந்த ஈனச்செயல்களுக்காக தமிழர் ஒருவருக்கு சொந்தமான ஒரு ஊடகம் முன்னின்று செயற்படுகின்றது.
விடுதலைப் புலிகள் வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் முஸ்லிம்களை கொன்று குவித்தனர்.அவர்களது சொத்துக்களை பறித்தனர்.அத்தோடு மட்டுமல்லாமல் மதத் தளங்களை உடைத்து நொருக்கினர் இதுவெல்லாம் வரலாற்றுப் பதிவாகும்.வடக்கில் தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வவுனியா வந்த போது அவர்களை பராமறித்து,அவர்களை அவர்களது மண்ணில் மீள்குடியேற்றம் செய்தேன்.நான் வகித்த மீள்குடியேற்ற அமைச்சின் மூலம் இதனை செய்தேன்,அப்போது கூட நீண்டகாலமாக முஸ்லிம்கள் அகதி முகாமில் வாழ்ந்து வந்தனர்.இப்படிப்பட்ட செயற்பாடுகளை நாம் செய்த போதும்.இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் மனிதாபிமானமற்ற முறையில் நடக்கின்றனர்.அன்று புலிகள் இந்த மக்களை வெளியேற்றிய போது,அதற்கு ஆதரவாக இருந்த இந்த தமிழ் கூட்டமைப்பினர்,இன்று அந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு எதிராக செயற்படுகின்றனர்.முல்லைத்தீவில் 2700 குடும்பங்கள் வாழ்ந்தனர்.ஆனால் இன்று அங்கு 700 குடும்பங்கள் மட்டுமே வாழக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனைய மக்கள் மீள்குடியேற சென்ற பொது அவர்கள் புத்தளத்திலும்,கொழும்பிலும் இருந்து வெளிமாவட்ட மக்கள் வருகின்றார்கள் என்று இந்த தமிழ் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டங்களை செய்து அந்த மக்களைின் மீள்குடியேற்றத்தை தடுத்தனர்.
இந்த அகதி வாழ்க்கை எமக்கு வேண்டாம் என்று வடபுல முஸ்லிம்கள் தமக்கு கிடைத் சொற்ப உதவிகளையும் துறந்து அந்த மண்ணுக்கு போகின்ற போது அங்குள்ள சில அதிகாரிகளும்,மாகாண சபை உறுப்பினர்களும்,அவர்களது அடிவருடிகளும் இந்த மக்களை காடுகளை அழிப்பவர்களாக காண்பித்து அநாகரிகமான வேலைகளை செய்கின்றனர்.
வடமாகாண சபை உருவாக்கப்பட்டு இரண்டுவருடகாலத்தில் வடக்கில் முஸ்லிம்களுக்கான எந்தவொரு உதவிகளையும் செய்யமால் ஓரவஞ்சனையுடன் செயற்படுகின்ற நிலை காணப்படுகின்றது.இந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேநன அவர்களை உருவாக்குவதில் நாங்களும் பெரும் பாங்கினை ஆற்றியுள்ளோம்,அது போல் பிரதமரை ஆட்சியில் அமரச் செய்ய பெரும் தியாகங்களை செய்தவர்கள் நாங்கள்,எமது இந்த மக்களது தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது என்பதை இந்த சபையில் சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.
தற்போது கொண்டுவரப்படவுள்ள பொறி முறையில் 2007 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் முன்னெடுப்புக்கள் இடம் பெறுவதாக அறிகின்றோம்.ஆனால் இந்த அனுகு முறை பிழையானது 1990 ஆம் ஆண்டு வடக்கில் வாழ்ந்த 1 இலட்சம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் இவர்களுக்கு இதன் மூலம் எந்த தீர்வும் கிட்டப் போவதில்லை என்பதை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.இது தொடர்பில் இந்த சபை கவனம் செலுத்த வேண்டும்,ஒரே மொழிப் பேசும் எம்மை அடக்கி ஆழும் தீர்வு என்பது ஒரு போதும் சமமானதாக அமையாது என்பதை புரிந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சரியானதொரு கௌரவமானதுமான தீர்வு வழங்கப்பட வேண்டும்,
தமிழ் மக்கள் இழந்தவற்றை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும்,அவர்கள் அனுபவித்த துன்பங்கள் அகற்றபட வேண்டும்,நிம்தியாக வாழ வேண்டும்,இதனை அடைந்து கொள்ள நாம் அன்று முதல் இன்று வரை எமது ஒத்துழைப்பினை வழங்கிவருகின்றோம்,எதிர்காலத்திலும் அதனை வழங்குவோம்,அதற்காக எமது அகில இலங்கை மக்கள் கட்சி என்னவகையான உதவிகளை செய்ய முடியுமோ அதனை செய்யும் என்பதை கூறவிரும்புகின்றேன்.
அதே போல் மற்ற இனத்தின் நியாயமான கோறிக்கைகள் புறந்தள்ளி அவர்களை திருப்தியடையச் செய்யாத எந்தவொரு தீர்வும் நிரந்தரமானதாக அமையாது என்பதை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன்.இந்த விடயத்தில் ஜனாதிபதி,பிரதமர்,எதிர்கட்சி தலைவர்,மற்றும் வடமாகாண முதலமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்திய வீடமைப்பு திட்டம் வந்த போது அதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் பகிர்ந்து கொடுத்த போது எனக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வவுனியாவில் ஆர்ப்பாட்டங்களை செய்தனர்.கொடும்பாவி செய்து எறித்தார்கள்..அதே போல் மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி என்னும் பாரம்பரிய முஸ்லிம் கிராமத்துக்கு இந்த வீடைமப்பு திட்டத்தினை வழங்கிய போது அதற்கு எதிராக மன்னார் கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை செய்தனர்.இந்த அநியாயத்தை செய்தனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடத்தில் மனசாட்சி இருந்தால்,நேர்மை இருந்தால் எமது முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனவாமற்ற கண்களால் பாருங்கள் என்று கேட்கின்றோம்.
விடுதலைப் புலிகள் அன்று இந்த முஸ்லிம்களுக்கு எதிராக இழைத்தவைகளை இங்கு பட்டியலிட்டு காட்டலாம்.பொலன்றுவையில் அழிஞ்சுப்பொத்தானையில் புலிகள் 200 முஸ்லிம்களை படுகொலை செய்தனர்.பச்சிளம் குழந்தைகள்.பெண்கள் என்று பார்க்காமல் இந்த கோரத்தை செய்தனர்.பல்லிய கொடல்லவிலே,கிண்ணியாவிலே,அம்பாறையிலே,மட்டக்களப்பிலே,காத்தான்குடியிலே என்று முஸ்லிம்களை கொன்ற வரலாறுகள் இன்னும் இருக்கின்றது.இவவ்வாறதொரு நிலையில் எமது சமூகம் பலமிழந்த சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றது.தொடர்ந்தும் இந்த நிலையில் எமது சமூகம் இந்த நாட்டில் அடக்கப்பட்ட சமூகமாக வாழ முடியாது,அதற்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தமதுரையில் குறிப்பிட்டார்..