மைத்திரி அணியில் சேர்ந்துள்ளவர்கள் முஸ்லிம்களுக்கும். சிறுபான்மை மக்களுக்கும் எதிராகச் செயற்படுபவர்கள். மைத்திரியுடன் சேர்ந்துள்ள ஹெல உறுமய செயலாளர் சம்பிக்க ரணவக்கவின் ஒப்பந்தத்ததில் சிறுபான்மை மக்கள் நலன் பேணல் பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. இது குறித்து சிறுபான்மை மக்கள் தெளிவு பெற்று வாக்கை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார. தகவல் ஊடக சிரேஷ்ட ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி சகிதம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவர் உரையாற்றி வருகிறார்.
அம்பாறை, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வெலிமட, ஊவாபரணகம, அக்கரைப்பற்று, திருக்கோயில், கந்தகெட்டிய, வியலுவ. கிண்ணியா, சேருவில போன்ற பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் அஸ்வர் உரையாற்றினார். முஸ்லிம்களுக்கு விரோதமானவர் தான் சரத் பொன்சேகா முஸ்லிம்களை “வந்தான் வரத்தான் எனக் கேவலமாய் பேசியவர் தான் அவர்.
அவர் இன்று மைத்திரியுடன் இணைந்துள்ளார். இது எமக்கு ஆபத்தாகும். முஸ்லிம்கள் விழிப்புற வேண்டும்
ரன்ஜன் ராமநாயக்கா “ஷரீஆ சட்டம் பற்றி பாராளுமன்றில் தவறாகப் பிரஸ்தாபித்த போது நான் ரணிலிடம் வினா எழுப்பினேன். அவரோ ஒன்றும் பேசாமல் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார். மைத்திரிபால சிரிசேன முஸ்லிம்களின் எதிரியாவார்.
அரிசி வர்த்தகத்தில் முன்னேறிய முஸ்லிம்களின் அசிரி ஆலைகளை அபகரித்த அணியில் அவர் முன்னின்றவர். அவரை முஸ்லிம்கள் எப்படி நம்புவது?
அளுத்கம, பேருவளை அசம்பாவிதங்கள் பற்றி மைத்திரி ஒன்றும் பேசவில்லை. முஸ்லிம்கள் இவரை நம்பக்கூடாது என்றும் அஸ்வர் தொடர்ந்து தெரிவித்தார்.
முல்லைத்தீவு பிரசாரக் கூட்டத்தில் வைத்து சீன மொழியில் பெயர்க்கப்பட்ட “மஹிந்த சிந்தனை” நூலின் பதிவையும் அஸ்வர் ஜனாதிபதியிடம் கையளித் தார்