அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமை ச்சர்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்குமிடையிலான சந்திப்பொன்று இவ்வாரம் நடைபெறுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இன்று (19) திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது இச் சந்திப்புக்கான திகதி தீர்மானிக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பொதுபல சேனாவின் போக்கு உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பின் போது பேசப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (எஸ்.கே)