ஊடகப் பிரிவு
இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாலராக இருந்து முஸ்லிம் உலகுக்கு பணியாற்றிய சவூதி ஆரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்களின் திடீர் மரணம்(2015-01-23) குறித்து இலங்கை முஸ்லிம்களும் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அன்னாரின் சுவன வாழ்வுக்காக அல்லாஹ்விடத்தில் அனைத்து முஸ்லிம்களையும் பிரார்த்திக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இன்று அதிகாலை சவூதி அரேபியாவில் வபாத்தான மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்கள் சிறிது காலம்நோயுற்று இருந்திருந்தார்.90 வயது நிரம்பிய மர்ஹூம் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் சவூதி அரேபியாவின் 6 வது மன்னராக இருந்து செயற்பட்டுவந்துள்ளார்.
1961 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவின் மேயராகவும்,அதன் பிற்பாடு சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்பு பிரிவின் கொமாண்டராகவும் பணியாற்றியுள்ளார்.
குறிப்பாக இலங்கை முஸ்லிம்களின் தேவைப்பாடுகள் தொடர்பில் அதீத அக்கறை கொண்ட மன்னராக இருந்துள்ளதை இங்கு நினைவுபடுத்தியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன் இலங்கையிலுள்ள சவூதி துதுவராலாயம் ஊடக பல்வேறு சமூகப் பணிகளும் இவரது காலத்தில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறினார்.
அன்னாரின் மறைவு குறித்து,இலங்கை அரசாங்கத்தினதும்,முஸ்லிம்களினதும் ஆழ்ந்த கவலையினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளதுடன்,தமது அனுதாபத்தை இலங்கையில் உள்ள சவூதி துதுவரலாயத்துக்கும் அறிவித்துள்ளார்.