Breaking
Sun. Dec 22nd, 2024

– சாகுல் ஹமீட் –

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை கருத்து தெரிவித்துள்ளார். அதில், தாத்ரி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்களை அரசு ஒருபோதும் ஆதரிக்காது. இதனை அரசு எதிர்க்கிறது. பா.ஜ.,வும் சரி, அரசும் சரி, நானும் சரி இந்த போலி மதவாதத்தை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சிகள் இதனை வேண்டுமென்றே பிரச்னையாக்க முயற்சிக்கின்றன. பாக்., பாடகர் குலாம் அலி விவகாரம் சர்ச்சை ஆக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாட்டிறைச்சி உட்கொண்டதாக கூறி உத்தரபிரதேச மாநிலம் தாத்ரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முகம்மது இக்லாப் என்பவர் உள்ளூர் கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தனது மவுனத்தை கலைக்க வேண்டும் காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதேபோல், பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி இசை நிகழ்ச்சி நடத்த மும்பையில் அனுமதிக்க முடியாது என்று சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த விவகாரங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இருப்பினும் இவ்விவகாரங்கள் குறித்து தொடர்ந்து மவுனம் காத்து வந்த பிரதமர் நரேந்திர மோடி தாத்ரி சம்பவம் வருத்தமளிப்பதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:- தாத்ரி சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது. இது போன்ற சம்பவங்களை அரசு ஒருபோதும் ஆதரிக்காது. இதனை அரசு எதிர்க்கிறது. பாரதீய ஜனதா இந்த போலி மதவாதத்தை எதிர்க்கிறது. எதிர்க்கட்சிகள் இதனை வேண்டுமென்றே பிரச்னையாக்க முயற்சிக்கின்றன. பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்தது வேதனை அளிக்கிறது. இந்த விவகாரங்களில் மத்திய அரசின் பங்கு எதுவும் இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post