பொதுத் தேர்தலுக்கு முன்தினம் கூட என்னை ஒரு சிங்களவரென்றும், முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கக்கூடாதெனவும் முஸ்லிம் காங்கிரஸ் விசமப்பிரசாரம் செய்தும் கணிசமான முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்திருந்தனர். இத்த மக்களுக்கு பெருநன்றி தெரிவிக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயா கமகே கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிந்தவூர் மத்தியகுழு அலுவலகத்தில் நடைபெற்ற வாக்களித்த மக்களுக்கு நன்றி பகரும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நிந்தவூர் அமைப்பாளர் எம்.எம்.எம்.றிபாக் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே தொடர்ந்து உரையாற்றுகையில்,
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தைப் பொறுத்தவரை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்கு ஐக்கிய தேசியக் கட்சியின் போட்டியிட்ட வேட்பாளர்களில்இ நான் விருப்பு வாக்கில் முதலிடம் பெறக்காரணமான எனக்கு வாக்களித்த சகல மக்களுக்கும் நன்றி கூறுகின்றேன்.
குறிப்பாகத் தேர்தலுக்கு முன்தினம் கூட நான் ஒரு சிங்களவரென்றும், முஸ்லிம்கள் அவருக்கு வாக்களிக்கக்கூடாதென்றும் முஸ்லிம் காங்கிரஸ் விசமப்பிரசாரம் செய்தது.
ஆனால் கணிசமான முஸ்லிம் மக்கள் எனக்கு வாக்களித்துள்ளமையைப் பெருமிதமாகக் கொள்வதுடன், இந்த மக்கள் என்மீது கொண்ட அன்பையும், நம்பிக்கையையும் என்றும் மறக்கமாட்டேன்.
என்னைப் பொறுத்தவரை சாதிஇ மத பேதங்களுக்கப்பால் எமது மக்களுக்கு சேவையாற்றுவதையே முழுநோக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றேன். ஒரு இலட்சம் இந்தவகையில் நான் தேர்தல் பிரசார காலங்களில் உறுதியளித்தவாறு நமது அம்பாறை மாவட்டத்தில் இனஇ மதஇ பேதங்கள் பாராது ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை நமது இளைஞர்இ யுவதிகளுக்குப் பெற்றுக் கொடுப்பதை முக்கிய கடமையாக வரித்துக் கொண்டுள்ளேன்.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும், மக்கள் பிரதி நிதிகளையும் பொறுத்தவரை, சுயநலம் கொண்டவர்களாகவோ மக்களை ஏமாற்றி தம்மை வளர்த்துக் கொள்பவர்களாகவோ ஒரு போதும் செயற்படமாட்டார்கள்.
மக்கள் சேவகர்களாகவும், சுபீட்சமான பாதையில் மக்களை சந்தோசமாக வாழவைக்க வழிவகுப்பவர்களாகவுமே நாம் செயற்படுவோம். எனது மனைவி எனது மனவி அனோமா கமகே இன்று பிரதமரால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எப்போதும் நம்பெண்கள் தொடர்பில் மிகுந்த அக்கறைகொண்டு செயற்பட்டு வருபவர். கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பெண்கள் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கிப் பயன்படுத்த வுள்ளார்.
பெண்கள் மத்தியில் வறுமை நீங்கவும், சுயதொழில்கள் மூலம் சொந்த வருமானம் பெறவும் பயிற்சிகளையும், திட்டங்களையும் செயற்படுத்துவதற்கும் அவர் திடசங்கற்பம் பூண்டுள்ளார்.
இன்றைய அரசில் மக்கள் நிம்மதியாகவும்இ சுபீட்சமாகவும் வாழ வழிவகுப்பதே எமது தலைவர்களின் நோக்கமாகும். இந்த இலக்குடன் பிரதமர் ரணில் விக்கிர மசிங்க முழுப்பாராளுமன்றத்தையும் அரசாக மாற்றும் நன்நோக்குடன் செயற்பட்டு வருகின்றார்.
“அராஜகயுகம் ஓய்ந்து புதியயுகம் பிறந்து நல்லாட்சி மலர்ந்துள்ளதன் பயனை மக்கள் நிச்சயம் அனுபவிப்பர்” இவ்வாறு அவர் கூறினார்.vk