Breaking
Mon. Dec 23rd, 2024

முஸ்லிம்களின் உரிமைகளையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் தேர்தலாகவே ஊவா மாகாண சபைத் தேர்தலை தான் பார்ப்பதாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவிதித்தார்

 

ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் மு.காவுடன் இணைந்து போட்டியிடும் அ.இ.ம.கா வின் தேசியத் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெள்ளி ,சனி ஆகிய தினங்களில் மேற்கொண்ட  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

மு.கா. , அ.இ.ம.கா இத்தேர்தலில் ஒற்றுமைபட்டதானது நாடு பூராகவும் உள்ள 20 இலட்சம் முஸ்லிம்களையும் மிகுந்த சந்தோசத்திற்கு உட்படுத்தியுள்ளது.

 

எனினும் இந்த ஒற்றுமையை சிதைக்க பல முயற்சிகள் இடம்பெறுவதை நாங்கள் அறிவோம். இந்த நாசகார சதிகளுக்கு எவரும் உடந்தையாகி விடக்கூடாது.

 

பதுளை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள ஒற்றுமை மூலம் இரண்டு ஆசனங்களைப் பெறும் நல்ல சூழல் தோன்றியுள்ளது.

 

இதனை சிதைக்க எவரும் முயற்சிக்க வேண்டாம். அவ்வாறானவர்களின் அச்சதி நடவடிக்கைளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

 

அரசைப் பாதுகாக்க ,ஊவா மாகாண ஆட்சியை அரசுக்கு பெற்றுக் கொடுக்க நாங்கள் இங்கு போட்டியிட வில்லை. அவ்வாறான அபத்தமான பொய்களைக் கூறி இந்த ஒற்றுமையை சீர்குலைக்க இங்குள்ள ஒரு சிலர் முயற்சிப்பது வேதனையை ஏற்படுத்துகின்றது.

 

பதுளை மாவட்ட முஸ்லிம்களின் ஒற்றுமை என்பது நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் கௌரவம் ,உரிமை, பாதுகாப்பு என்பதற்கு கிடைத்த ஒரு வழியாகவே நான் பார்க்கின்றேன்.

 

அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்துக்களைக் கொண்ட நானும் சகோதரர் ரவூப் ஹக்கீமும் அனைத்து கருத்து வேறுபாடுகளையும் திறந்து இந்த ஊவா முஸ்லிம் சமுகத்திற்காக ஒன்றுபட்டிருக்கின்றோம்.

 

மு.கா வேட்பாளரா, அ.இ.ம.கா வேட்பாளரா அல்லது இக்கூட்டில் போட்டியிடும் வேறொருவாரா வெற்று பெறுவது என்பது அல்ல பிரச்சினை. கலிமாச் சொன்ன எமது வேட்பாளர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே எமது நோக்கம்.

 

பதுளை மாவட்ட முஸ்லிம்களுக்காக பேசுவதற்கு ,தைரியமாக குரல் கொடுப்பதற்கு தலைமை தாங்குவதற்கு அனைவரையும் ஒன்று படுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என அவர் குறிபபிட்டார்.

Related Post