அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர் இரவு விடுதியில் 50 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ள திபெத்திய மதகுரு தலாய் லாமா, சில முஸ்லிம்கள் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுவதால் முஸ்லிம் தீவிரவாதி என பொத்தாம்பொதுவாக அனைவரையும் அழைப்பது தவறு என கூறியுள்ளார்.
தனது மனதில் தோன்றும் கருத்தை கூறும் உரிமை டொனால்ட் டிரம்புக்கு உண்டு. ஆனால், அவரை நான் சந்திக்க நேர்ந்தால் உங்களது நிலைப்பாட்டுக்கான காரணம் என்ன? என்பதை விபரமாக கூறுங்கள் என்று கேட்பேன். புத்தமதம் உள்ளிட்ட எல்லா மதம்சார்ந்த சமூகத்திலும் வம்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களை அதே மதத்தை சேர்ந்த மற்றவர்களுடன் இணைத்துப் பார்க்க கூடாது.
முஸ்லிம்களில் சில தனிநபர்கள் சில தீவிரவாத தாக்குதல்களை நடத்தலாம். அதற்காக, முஸ்லிம் தீவிரவாதிகள் என பொத்தம்பொதுவாக நாம் கூற கூடாது. இது தவறென்று நான் நினைக்கிறேன்.