மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளுக்கு வீட்டுப் பணிகளுக்கென செல்லும் இலங்கை பெண்கள், அங்கு அடிமை சேவைகளில் ஈடுபடுத்தப்படுவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்கள வானொலி ஒன்றின் இணையத்தளத்திற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது சம்பந்தமான எமது அமைப்பின் மாநாடுகள் மற்றும் சமய போதனைகளின் போது மக்களுக்கு விளக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் அடிமை தொழில் சம்பந்தமாக நாங்கள் கிராம மட்டத்தில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வருகிறோம்.
வீட்டுப் பணிகளுக்கு என பெண்கள் அழைத்து செல்லப்பட்டாலும் உண்மையில் அவர்கள் அடிமை சேவைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்த அடிமை சேவை குறித்து நாங்கள் பலருக்கு விளக்கமளித்துள்ளோம். அது தற்போது வெற்றியளித்து வருகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பாதிக்கப்பட்டு வரும் பெண்களுக்கு நாங்கள் உதவிகளை செய்து வருகின்றோம்.
உதவிகளை செய்ய எங்களிடம் பணம் இல்லை. இப்படியானவர்களுக்கு உதவிகளை செய்வதற்கே வெளிவிவகார அமைச்சு இருக்கின்றது.
அமைச்சின் அதிகாரிகள் தமது மக்களுக்காக செய்ய வேண்டிய வேலைகளை செய்யாதன் காரணமாகவே சகல பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.