Breaking
Sun. Dec 22nd, 2024

நோன்புப் பெரு­நா­ளை­யொட்டி, நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கு எதிர்­வரும் 7 ஆம், 8 ஆம் திகதி களில் விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சின் முஸ்லிம் பாட­சா­லைகள் அபி­வி­ருத்திப் பிரிவின் பணிப்­பாளர் இஸட்.தாஜூடீன் தெரி­வித்தார்.

குறித்த இரு விடு­முறை தினங்­க­ளுக்­கு­மான பதில் பாட­சாலை ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆம் திக­தி­களில் நடாத்­தப்­பட வேண்டும் எனவும் அமைச்சு கேட்­டுள்­ளது. இது ­கு­றித்து, கல்­வி­ய­மைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் கல்விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ள­தா­கவும் பணிப்­பாளர் தாஜூடீன் மேலும் தெரி­வித்தார்.

புனித ரமழான் நோன்பு விடு­மு­றைக்­காக கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி மூடப்­பட்ட முஸ்லிம் பாட­சா­லைகள் மீண்டும் ஜூலை 7 ஆம் திகதி திறக்­கப்­பட வேண்டும் என அமைச்சு ஏற்­க­னவே வெளி­யிட்­டுள்ள தவணை நாட் கலண்­டரில் குறிப்­பிட்­டுள்­ளது.

இருந்த போதிலும், நோன்புப் பெரு­நாளைத் தொடர்ந்­து­வரும் 7 ஆம் திகதி முஸ்லிம் பாட­சா­லை­களை மீளத் திறப்­பதில் எதிர்­கொள்­ளப்­படும் சிர­மங்கள் குறித்து, முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வ­சத்­திடம் இரு தினங்­க­ளையும் விடு­மு­றை­யாக்­கு­மாறு கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

இதன்­பி­ர­காரம், குறித்த கோரிக்­கையை ஏற்றுக் கொண்ட கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் பிரஸ்­தாப இரு தினங்­க­ளையும் விடு­மு­றை­யாக்கும் தீர்­மா­னத்தை மேற்­கொண்­டுள்ளார். முஸ்லிம் பாட­சா­லைகள் விடு­மு­றையின் பின்னர் மீண்டும் கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக 11 ஆம் திகதி மீளத் திறக்­கப்­ப­ட­வுள்­ளன.

முஸ்­லிம்­களின் நலன்­க­ருதி, அவ­சர நட­வ­டிக்கை மேற்­கொண்ட கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம், இதற்காக கோரிக்கை விடுத்த முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோருக்கும், அமைச்சின் அதிகாரிகளுக்கும் முஸ்லிம்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

By

Related Post