Breaking
Mon. Dec 23rd, 2024
SAMSUNG CAMERA PICTURES

வடக்கிலும்,கிழக்கிலும் முஸ்லிம்களின் பிரதி நிதித்துவம் இல்லாமல் போக வேண்டும் என்ற வியுகத்தை வகுத்தே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் எதிர்வரும் பாராளுமன்றத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் பிரதி நிதித்துவம் குறையுமெனில் நாம் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என்றும் எதிர்வு கூறினார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ஹூசைன் இஸ்மாயில் தலைமையில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சனிக்கிழமை சம்மாந்துறையில் இடம் பெற்ற போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வரலாறு காணாத மக்கள் வெள்ளத்தின் மத்தியில் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைத்துவரப்பட்டார்,இந்த நிகழ்வில் ஜக்கிய தேசிய கட்சியின் மருதமுனை பிரதான அமைப்பாளர் சம்சுல் அமான் அமைச்சர் தலைவர் றிசாத் பதியுதீனுக்கு பொன்னாடை போர்த்தி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமையினையும் பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து அமைச்சர் தமதுரையின் போது –

பாராளுமன்றத்திற்கு அண்மையில் கொண்டுவரப்பட்ட 20 வது திருத்தம் தொடர்பில் நாம் கடுமையான ஆட்சேபத்தை தெரிவித்தோம்.இந்த நாட்டு சிறுபான்மை சமூகங்கள் தமது அரசியல் உரிமைகளை அனுபவிக்க விடாது தடுக்கும் பிரேரணையாக அது இருந்தது,இதே போல் தான் எதிர்வரும் பாராளுமன்றமும்,இந்த திட்டத்தை மீள கொண்டுவரும்,அப்போது அது தொடர்பில் தையரியமாக,துணிவுடன்,சமூகத்தின் மீது பற்றுருதி கொண்டு பேசும் மக்கள் பிரதி நிதிகள் அவசியப்படுவார்கள்,அந்த அணிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் வகையில் எமது அகில இலங்கை மக்கள் காபங்கிரஸ் இம்முறை 8 ஆசனங்களை போட்டியிடும் மொவட்டத்தில் பெற்று,2 போனஸ் ஆசனங்களையும் பெற்று 10 பாராளுமன்ற உறுப்பினர்களை பெறும் என்பதை கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.

நமது கட்சி அம்பாறையில் தனித்து போட்டியிடுவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன.இந்த விமர்சனங்களை கூறுபவர்கள் யார் என்பதை பார்த்தால் அவர்கள் எமது முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை விருமபாதவர்கள் என்பது புலனாகின்றது.ஜக்கிய தேசிய கட்சியுடன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருப்பதன் மூலம் அவர்களது பட்டியிலில் 3 பெறும்பான்மை பாராளுமன்றப் பிரதி நிதித்துவம் சென்றால் அதில் போட்டியிடும் முஸ்லிம்களின் நிலை என்னவாகும் என்பதை நாம் தெளிவாக புரிந்ததன் பயனாகத்தான் அம்பாறைக்கான முஸ்லிம் பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை அடையும் வழியில் தேர்தல் காய் நகர்த்தல்களை செய்துவருகின்றோம்.இந்த மாவட்டம் என்பது நீண்டகாலமாக அபிவிருத்திகளில் புறக்கணிக்கப்பட்ட வந்துள்ளது,பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் எதனை இந்த கட்சி செய்யும் என்று எதிர்பார்த்து உருவாக்கினார்களோ,அந்த கொள்கையில் இருந்து மாறி கட்சியின் தலைமைத்துவம்,இன்னொரு கட்சிக்கு தம்மை அடைமாணம் வைத்துள்ள துர்பாக்கிய அரசியல் நிலையினை நாம் பார்க்கின்றோம்.

இவ்வாறான தலைமைத்துவத்தினால் இந்த நாட்டு முஸ்லிம்கள் எந்த நன்மையினையும் அனுபவிக்க முடியாது மட்டுமல்ல,எமது சமூகத்தின் அபிலாஷைகள் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.இந்த நிலையில் தான் அம்பாறையில் எமது கட்சி தனியாக களமிறங்கி இம்மாவட்ட முஸ்லிம் மக்களது பாதுகாப்பை,அரசியல் இருப்பை உறுதிப்படுத்த களம் இறங்கியுள்ளது.

இந்த தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் போராட்டத்தின் ஆரம்பமாக இதனை இந்த மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைப்புவிடுத்தார்.

Related Post