முஸ்லீம் பெண்களின் திருமணவயது 15 என குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
17 வயதான முஸ்லீம் இளம் பெண்ணை திருமணம் செய்தவர் மீது குழந்தைத் திருமண சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
முஸ்லீம்களின் தனிச் சட்டத்தின் படி பெண்கள் பருவம் அடைந்து இருந்தாலோ அல்லது 15 வயது பூர்த்தி அடைந்து இருந்தாலோ பெற்றோரின் சம்மதம் இன்றியும் திருமணம் செய்து கொள்ளலாம்.
இந்நிலையில் சூரத் பகுதி முஸ்லீம் இளைஞர் யூசுப் லோகத் மீது 2006 ஆம் ஆண்டு குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின் படி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜே.பி.பத்ரிவாலா, பருவம் அடைந்த அல்லது 15 வயது முஸ்லீம் பெண் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இஸ்லாமிய தனிச் சட்டம் கூறுவதாக குறிப்பிட்டு, யூசுப் லோகத் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
யூசுப் லோகத் மீது, அவர் திருமணம் செய்த பெண்ணின் தந்தை, 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குழந்தைத் திருமணச் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கும்படி வழக்குத் தொடர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.