முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளும் வயதெல்லை 12இல் இருந்து 16 அல்லது 18ஆகஅதிகரிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்படவுள்ளது.
முஸ்லிம் திருமணம் மற்றும் விவகாரத்து சட்டம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டஜனாதிபதி நிபுணர்கள் குழு இந்த பரிந்துரையை முன்வைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
திருமண வயதெல்லை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிபுணர்கள் குழுமேற்கொண்டுள்ள போதும், அதனை 16 ஆகவா அல்லது 18 ஆகவா அதிகரிப்பது என்பது தொடர்பில்இன்னும் தீர்மானிக்கவில்லை.
இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
இதன் பரிந்துரை அறிக்கை எதிர்வரும் ஜுன் மாதம் முன்வைக்கப்படவுள்ளது.
இந்த குழு கடந்த 2009ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போதுநியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.