Breaking
Tue. Mar 18th, 2025

அமெரிக்காவில் டெக்டாஸ் மாகாணத்தில் உள்ள ஹீஸ்டன் முதல் காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 7–வது படிக்கும் முஸ்லிம் மாணவன் வாலீத் அபுஷாபான் (12).

சம்பவத்தன்று வகுப்பறையில் ‘பென்ட் இட் லைக் பெக்காம்‘ என்ற சினிமா படம் காட்டப்பட்டது. அதை தொடர்ந்து பரீட்சை நடத்தப்பட்டது. அதன் பின்னர் படத்தில் வந்த காமெடி காட்சிகளை நினைவுபடுத்தி மாணவன் வாலீத் சத்தமாக சிரித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அங்கு வந்த ஆங்கிலமொழி ஆசிரியை வாலீத்தை பார்த்து ‘நீ ஒரு தீவிரவாதி’ அதனால்தான் சிரிக்கிறாய் என்றார்.

அதைக் கேட்டு உடன் படிக்கும் மற்ற மாணவர்கள் பலமாக சிரித்தனர். அவர்களும் வாலீத்தை தீவிரவாதி என அழைத்து கேலி கிண்டல் செய்தனர்.

இதனால் மனவருத்தம் அடைந்த வாலீத் அதுகுறித்து தனது தந்தை மாலிக் அபுஷா பானிடம் தெரிவித்தான். அவர் பள்ளி நிர்வாகத்திடம் தனது மகனை தீவிரவாதி என அழைத்த ஆசிரியை மீது புகார் செய்தார்.

அதை தொடர்ந்து அந்த ஆசிரியை உடனடியாக ‘சஸ்பெண்டு’ (தற்காலிக பணிநீக்கம்) செய்யப்பட்டார்.

By

Related Post