Breaking
Fri. Jan 17th, 2025

இறைத்தூதர் முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது.

பெர்லின் அரச நூலகத்தில் பல ஆண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த குர்ஆன் பாகங்கள் சூரிச்சில் இருக்கும் ஆய்வுகூடத்தில் சோதனை யிடப்பட்டுள்ளது.

மிருகத் தோலினாலான ஏழு பக்கங்கள் கொண்ட இந்த அல் குர்ஆன் பாகம் கி.பி. 606 இல் இருந்து 652 ஆம் ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவை என்று அந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது.

‘கோர்பஸ் கொரானிகஸ்ம்” என்று நீண்டகால திட்டத்தின் கீழ் சூரிச் ஆய்கூடம் ஒன்றில் இந்த அல் குர்ஆன் பாகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக nஜர்மன் அரச நூலக பேச்சாளர் ஜpனட் லம்ப்லியா அந்நாட்டின் மெகிச்சர் ஒல்ஜமைன் சைதூன் என்ற பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் ஐரோப்பாவெங்கும் இருக்கும் அல் குர்ஆன் பாகங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப் பிடத்தக்கது.

குறித்த குர்ஆன் பாகங்கள் nஜர்மன் அரச நூலகத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த அல்குர்ஆன் பாகங்கள் எப்தில் இருந்து nஜர்மனிக்கு கொண் டுசெல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

Related Post