Breaking
Thu. Dec 5th, 2024
(சர்ஜூன் ஜமால்தீன்) 
வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே என்று கவலைப்பட்டு அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சுயவிசாரனை செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக வாழ கைத்தொழில் மற்றும் வனிக துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் முஹர்ரம் புதுவருட வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்.
மேலும் தனது வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டாவது.
 முஸ்லிம்கள்  அல்லாஹ்வின் வேதத்தை கடைப்பிடித்து அவன் தடுத்தவற்றிலிருந்து விலகி சுவர்க்கத்திற்காக தயார் படுத்த வேண்டியுள்ளது.
அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக்கெடுத்துள்ளான். இவை வருடங்களாவும் மாதங்களாகவும் நாட்களாகவும் நேரங்களாவும் கணித்துள்ளான். இக்காலங்களின் மூலம்   வணக்க வழிபாடுகளை சிறப்பாக்கியுள்ளான்.   இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதுடன் அவனது அந்தஸ்தும் நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் இம் முஹர்ரம் மாதமும் ஒன்றாக உள்ளது.
இஸ்லாமிய வருடக்கணக்கில் முஹர்ரம் மாதம் முதல் மாதமாக இருப்பதுடன் புனிதமாக நான்கு மாதங்களிலும் ஒன்றாகும். இஸ்லாமிய வரலாற்றில் முஹர்ரம் மாதம் பல படிப்பினைகளை எமக்கு கொடுத்துள்ளது. இச் சிந்தனைகளை நமது வாழ்வில் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் எடுத்து நடப்பதுடன் இன மத பிரதேச வேறுபாடின்றி சகோதரத்துவமும் சமாதானமும் நமது மனங்களில் நிலையாக ஒளிர வாழ்த்துக்களை தெரிவிப்பதாக  அமைச்சர் றிசாட் பதியுதீன் தனது முஹர்ரம் புது வருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

 

Related Post