Breaking
Wed. Jan 15th, 2025

-முர்ஷித் கல்குடா-

மு ஸ்லீம் காங்கிரஸ் கட்சியில் இருந்த அடிப்படை போராளிகள் எல்லோருமே அக்கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அக்கட்சியில் மீதமாக இருந்தவர்களும் தற்போது இரட்டைக் கொடியில் போட்டியிடுகின்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபைகளுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மீறாவோடையில்  (21)  இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

முஸ்லீம் காங்கிரஸ்தான் கிபுலா, முஸ்லீம் காங்கிரஸ்தான் தனது மார்க்கம் என்று இருந்தவர்கள் எல்லோரும் கட்சி தங்களை நடு ஆற்றிலே கை விட்டுவிட்டது என்று சொல்கின்றார்கள். முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் போராளிகள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் பொறுத்திருந்து பாருங்கள். இறைவன் நாடினால் 2020ம் ஆண்டளவில் சரத் பொன்சேகா அவரது கட்சியை கலைத்து விட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொண்டது போல், ஸ்ரீ லங்க முஸ்லீம் காங்கிரசை கலைத்து விட்டு கண்டி கலகெதர பிரதேசத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியை பெற்றுக் கொண்டு கட்சியை முழுமையாக இல்லாமல் செய்து விடுவார் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த பிரதேசத்திலே எங்கள் கட்சி சார்பாக நாங்கள் தந்திருக்கின்றவர்களை வெல்ல வைத்து தாருங்கள். இவர்களை சிறந்த முறையிலே வழிகாட்டல் செய்வேன். அவர்கள் பிழையாக நடப்பார்களாக இருந்தால் இவ்வாறான மேடை போட்டு தெரியப்படுத்துகின்ற தலைவனாக இருப்பேன். இந்த தேர்தலிலே உங்களது வட்டாரத்தின் தலைவர்களை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

மனிதர்களில் பிழை செய்யாதவர்கள் எவரும் இல்லை. நூறு வீதம் நான் சரியானவன் என்றோ, எங்கள் கட்சியின் தலைவர் நூறு வீதம் சரியானவர் என்றோ நான் கூறுவதற்கு தயாரில்லை. இருப்பவர்களுக்குள் நல்லவர்கள் யார் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

 

 

 

 

Related Post