பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஜின் உயர்பீடக் கூட்டம் (09-12-2014) நேற்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி இன்று (10-12-2014) அதிகாலை வரை நீடித்துச்சென்றுள்ளது.
கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமயில் நடைபெற்றுள்ள உயர்பீடக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு அபிப்பிராயங்களையும் வெளியிட்டுள்ளனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இணையதளம் ஒன்றிற்கு தகவல் வழங்கும்போது,
பெரும் எண்ணிக்கையிலான அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டதில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவுக்கோ வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
காரசாரமான, சூடான விவாதங்களும் நடைபெற்றது. அமைச்சர் பஸீர் சேகுதாவூத்தும் இதன்போது பங்கேற்றார்.
இருந்தபோதும் பல மணி நேரம் நீடித்த அரசியல் உயர்பீடக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளபடாமலேயே கூட்டம் நிறைவுபெற்றது. அடுத்த அதிஉயர் பீடக் கூட்டதிலேயே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுவதற்கான சாத்தியங்கள் நிலவுகிறது. எனினும் அடுத்த உயர்பீடக் கூட்டம் எப்போது என அறிவிக்கபடவில்லையெனவும் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறினார் (ஜமு )