ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய மூதூர் முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், அக்கட்சியின் உயர்பீட உறுப்பினரும், தற்போதைய பிரதேச சபை உறுப்பினருமாகிய ஏ.எம்.ஹரீஸ் ஆசிரியர், அவருடைய ஆதரவாளர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார் .
மூதூர், பேர்ல் கிரேன்ட் ஹோட்டலில் நேற்று (21) இடம்பெற்ற குறித்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் முன்னிலையில் இணைந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர், தம்பலகாம பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உட்பட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.