Breaking
Wed. Nov 13th, 2024

-முர்ஷித் கல்குடா- 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முடியுமென்றால் பிறைந்துறைச்சேனையில் செய்த அபிவிருத்திகளை கூட்டம் போட்டு சொல்லட்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் பிறைந்துறைச்சேனை வட்டார வேட்பாளர் நாஸருக்கு ஆதரவு தெரிவித்து, பிறைந்துறைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரப்பாட்டு தற்போது கும்மாளப்பாட்டாக மாறிவிட்டது. இனி இந்தப் பாட்டு எல்லாம் ரவூப் ஹக்கீமுக்கும் பலிக்காது யாருக்கும் பலிக்காது.

இந்த நாட்டில் மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்தில் நொந்து நூலாகிப் போய் உள்ளார்கள்.  ஓட்டமாவடியில் மரத்தின் மூச்சு கிடையாது. எட்டுச் சின்னத்தில் இந்த நாட்டில் தேர்தல் கேட்கின்றார்கள். இவர்கள் தேர்தல் காலத்திற்கு மாத்திரம் வந்து உங்களை ஏமாற்றி விட்டு செல்வார்கள்.

ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்று பாடல் போடப்படுகின்றது. சூரியன் எல்லாக் கட்சிகளுக்கும் ஒன்றுதான். ஆதவன் எழுந்து வந்துதான் இப்ப இவங்க தலை கீழாக இருக்கின்றார்கள். பாட்டுப் போட்டுத்தான் மக்களை எடுக்கின்றனர்.

உங்களின் பிள்ளைகளின் கல்விக்கான நல்ல ஆசிரியர்களிடத்தில் வழங்கும் நீங்கள், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு தேர்தலில் நல்லவர்களின் கையில் ஆணையை வழங்குங்கள். நாங்கள் எல்லாம் வரட்டுத் தண்ணீரல்ல கிணற்றுத் தண்ணீர். உங்களின் அனைத்து தேவைகள் பிரச்சனைகள் எல்லாவற்றையும் நாங்கள் தான் செய்கின்றோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முடியுமென்றால் பிறைந்துறைச்சேனையில் செய்த அபிவிருத்திகளை கூட்டம் போட்டு சொல்லட்டும். எத்தனை பாடசாலை கட்டினார்கள், எத்தனை வீதிகள் போட்டார்கள், எத்தனை பேருக்கு வாழ்வாதாரம் கொடுத்தார்கள், இன்னும் எத்தனை உதவிகள் செய்தார்கள். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது ஒன்று மட்டும் தெரியும் ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான் என்றார்.

 

 

 

 

Related Post