Breaking
Sun. Dec 22nd, 2024

-ஊடகப்பிரிவு-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியும், முன்னாள் நகரசபை வேட்பாளருமான ஏ.ஜி.எம்.ஜபருள்ளாஹ் (நாசர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.

மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட அவர் கூறியதாவது,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சுமார் 25 வருடங்கள் இணைந்து செயற்பட்டுள்ளேன். மு.கா தலைவரினால் மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் நீரில் எழுதப்படும் பொய்யான வாக்குறுதிகளாகவே இருக்கின்றது. எனவே, தொடர்ந்தும் எம்மால் மக்களை ஏமாற்றி, எமது ஆதரவாளர்களின் வாக்குகளை மு.காவுக்கு வழங்கத் தயார் இல்லை என்றும் கூறினார்.

சேவைத் தலைவரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன்  இணைந்து தமது வட்டார மக்களுக்கு பல சேவைகளைப் பெற்றுக்கொடுக்கும் முகமாகவே, தமது மாற்றத்தை மக்கள் காங்கிரஸுடன் இணைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தமது 14 ஆம் வட்டார மக்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து செயற்படத் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related Post