Breaking
Sat. Nov 23rd, 2024
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் நாடாளுமன்றில் கட்சித் தலைவர்களுக்கான சிறப்புரிமையை இழந்துள்ளனர்.
இந்த இரண்டு கட்சிகளையும் நாடாளுமன்றில் தனிக் கட்சியாக கருதுவதில்லை என பிரதான கட்சிகளின் தலைவர்களின் தீர்மானித்துள்ளனர்.
இருவரையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மட்டும் கருதப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களுக்கான வரப்பிரசாதங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படாது.
இதன்படி> குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றில் முன்வரிசை ஆசனங்களையும் இழப்பார்கள்.
நிலையயிற் கட்டளை 23(11) அடிப்படையிலான கட்சித் தலைவர்களுக்கான எந்தவொரு சிறப்புரிமையும் வழங்கப்படாது.
எட்டாம் நாடாளுமன்றின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளாக ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, ஜே.வி.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளை ஏற்றுக்கொள்வது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்காக சபாநாயகர் கரு ஜயசூரியவின் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

Related Post