– மூதூர் முறாசில் –
மூதூரில் பசுமைக் குழு( Green Committee) என்னும் புதிய அமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.
மூதூர் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள சம்பூர் பகுதியில் அமைப்படவுள்ள அனல்மின்சார நிலையத்தை நிறுத்துவதற்கான வழிவகைகளை மேற்கொள்வதை முதன்மையான நோக்கமாகக்கொண்டே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மூதூர் பீஸ் ஹோம் அமைப்பின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை(15) அரபா நகர் ஜும்ஆப்பள்ளி வளாகத்தில் இடம்பெற்ற சமூக மற்றும் சன்மார்க்க அமைப்புகளின் ஒன்றுகூடலின் போதே இப்புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மூதூர் பிரதேசத்தில் வாழும் மக்களை உள்ளடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பில் ஜம்மியதுல் உலமா சபையின் மூதூர் கிளை, கதீப்மார்கள் சம்மேளனம், பள்ளிவாசல்கள் சம்மேளனம்,மீனவர் சமாஜம், விவசாய சம்மேளனம்,வர்த்தகர் சங்கம்,பீப்பிள்ஸ் போரம், நபால்தீன் நற்பணி மன்றம்,ஜம்மியதுல் இர்ஷhதிய்யா ஆகிய அமைப்புக்களோடு மூதூர் பீஸ் ஹோம் அமைப்பும் கைகோர்த்துள்ளது.
சம்பூரில் அமைக்கப்படவுள்ள அனல் மின்சாரதிட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமாக சகல தரப்பினருக்கும் விழிப்புணர்வூட்டுவதோடு அதனை இல்லாமற் செய்வதற்கு இறுதிவரை அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.