Breaking
Mon. Jan 13th, 2025

மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூபினால், மூதூர் தொகுதிக்கான தேர்தல் காரியாலயம் நேற்று (16) திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, மு.கா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால ஆதரவாளர்கள் சிலர், முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் வெற்றியின் பங்காளர்களாக, அவரின் கரங்களைப் பலப்படுத்துவதற்காக கட்சியில் இணைந்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் விசேட கூட்டத்தில், முதன்மை வேட்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அன்வர் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related Post