Breaking
Mon. Nov 18th, 2024

அமைச்சின் ஊடகப்பிரிவு

மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசங்களில் டெங்கு நோயைத் தடுப்பதற்கும் டெங்கு முகாமைத்துவத்துத்தை மேற்கொள்வதற்கும் அவசர நிதியுதவியாக 5 மில்லியன் ரூபாவை, அகில இலங்கை மக்;கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் வழங்கியுள்ளதாக கிண்ணியா நகரசபை முன்னாள் தவிசாளர் டொக்டர் ஹில்மி தெரிவித்தார்.WhatsApp Image 2017-03-17 at 11.43.14 AM

நேற்று மாலை(2017.03.16) மூதூர் தள வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு நோயாளர்களை பார்வையிட்டார். மூதூர் தள வைத்ததியசாலை மருத்துவ அத்தியகட்சகர் டாக்டர் பிரேம் உட்பட சுகாதார வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் ஆகியோருடன் சந்திப்பொன்றையும் ஏற்படுத்தி மூதூர் பிரதேச டெங்கு நிலவரங்களை கேட்டறிந்து கொண்டார். இந்த சந்திப்பில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ருப் ம் கலந்து கொண்டு நோயாளிகள் படுகின் அவஸ்தைகளை எடுத்துக்கூறினார். டெங்கினால் பாதிப்புற்ற நோயாளிகளின் குறைபாடுகளை விரிவாக கேட்டறிந்த அமைச்சர் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை எடுத்துக்கூறி, வைத்தியசாலையின் அவசரக்குறைபாடுகளை தீர்த்து வைத்தார்.

மூதூர், தோப்பூர் பிரதேசத்தில் சுமார் 424 டெங்கு நோயாளிகள் இனங்கானப்பட்டுள்;ளதாகவும் அவர்களில் ஒருவர் மூதுர்ர் வைத்திசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு இடமாற்றப்படட்டதாக வைத்திய அதிகாரிகள்  அங்கு தெரிவித்தனர்.

கட்டில் மெத்தைகள் பற்றாக்குறை, நுளம்புவலை, மருத்துவ உபகரணங்கள் பற்றாக்கறை, தொடர்பிலும் அமைச்ச்ரிடம் முறையிடப்பட்டது. மூதூர் பிரதேசதத்pல் பொதுச்சுகாதார  பரிசோதகர் பற்றாக்குறை பற்றி அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்ட போது , பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளருடன் தொடர்பை ஏற்படுத்திய அமைச்சர் தற்காலிகமாகவேனும் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கும் பலன் கிடைத்தது.

அத்துடன் அங்கு நிலவும் தாதிமாரின் பற்றாக்குறைக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த  அமைச்சர், மூதூர் பிரதேசதத்pல் வடிகான்களின் கழிவகற்றல் செயற்பாட்டுக்கென கழிவகற்றும் இயந்திரமொன்றை தற்காலிகமாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்ததுடன் இதற்கென நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.

இதே வேளை முன்னதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கிண்ணியா பிரதேத்துக்கு விஜயம் செய்து டெங்கு நோயாளர்களை பார்வையிட்டதுடன் பொது நூலகத்தில் சுகாதார சேவை அதிகாரிகளுடனும் பொது மக்களுடனும் தொண்டர்களுடனும் சந்திப்பை ஏற்படுத்தி குறைகளை கேட்டறிந்ததுடன் முடிந்தவரை அதற்கான தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.17309725_385144678516324_7895525845072369395_n (1) WhatsApp Image 2017-03-17 at 11.43.12 AM WhatsApp Image 2017-03-17 at 11.43.11 AM (1)

Related Post