தற்போதைய நிலையில் அமைச்சர் பஷீர் சேகுதாவூது தலைமையில் கட்சியின் ஒரு குழுவினர் அரசுடன் நேரடியாக ஐக்கியமாகும் முடிவில் உள்ளனர்.
இன்னொரு குழுவினர் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கத் தலைப்பட்டுள்ளனர். பைசல் காசிம், அஸ்லம் மற்றும் ஹரீஸ் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே பொருத்தமான தருணம் வரும்வரை எந்தப்பக்கத்துக்கும் ஆதரவு தெரிவிக்காமல் காலத்தைக் கடத்தும் யுக்தியைக் கையாள கட்சித் தலைவர் ஹக்கீம் முடிவெடுத்துள்ளார். இதற்கு ஆதரவாக செயலாளர் ஹசனலி, எம்.எஸ். தௌபீக் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹக்கீமின் அணியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஊடாக ஆளுங்கட்சியுடன் பேரம் பேசல் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் எதிர்வரும் புதன்கிழமைக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிளவு குறித்த தகவல்கள் உத்தியோகபூர்வமாக வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. (K)