மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிட முடியும் என சிரேஸ்ட சட்டத்தரணி பெற்றி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் இரண்டு தடவைக்கு மேல் தேர்தலில் போட்டியிட முடியாது என வெளியிடப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
எத்தனை தடவையும் பதவி வகிக்கக் கூடிய வகையில் அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டள்ளது.
ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் அரசியல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாகவும் ஜனாதிபதிப் பதவியை வகிப்பது அரசியல் அமைப்பிற்கு விரோதமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளர்.
பெற்றி வீரக்கோன் முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தடவையாக ஜனாதிபதி பதவியை வகிக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச
ராஜபக்ச மற்றும் ஜே.வி.வி. உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுனில் வட்டகல ஆகியோர் தெரிவித்துள்ளார்.