Breaking
Fri. Nov 1st, 2024

அஸ்ரப் ஏ சமத்

பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் மு. வேலாயுதம்.

பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் எதிர் நோக்குகின்ற காணியுரிமைஇ வீட்டுரிமை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளபடவிருக்கின்ற 100 நாள் வேலை திட்டத்திற்கு தங்களின் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் முன்வந்துள்ளமை பாராட்டப்படதக்க மகிழ்ச்சிகரமான செயலாகுமென பெருந்தோட்டதுறை இராஜங்க அமைச்சர் க. வேலாயுதம் தெரிவித்தார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பெருந்தோட்டதுறை கம்பனி நிறைவேற்ற அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சின் செயலாளர் திருமதி சு. விஜயலெட்சுமி அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலந்துரையாடலில் 21 பெருந்தோட்டத்துறை கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகளும் அவர்களின் உத்தியோகத்தர்களும் கலந்துக்கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலில்; தொடர்ந்தும் உரையாற்றுகையில் கே. வேலாயுதம் கூறிப்பிட்டதாவதுஇ 1977ம் ஆண்டின் பின்னர் மறைந்த முன்னாள் ஐனாதிபதி j.r.ஐயவர்தன அவர்களின் ஆட்சிகாலத்தில் தோட்ட பாடசாலைகள் அரச உடமையாக்கப்பட்டு பெருந்தோட்ட சமூகத்துடன் இணைக்கப்பட்டது. அதன் பின் 2003ம் ஆண்டு இன்றைய பிரதம் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் இந்திய வம்சாவளி மக்கள் எதிர் நோக்கிய நாளாந்த பிரச்சினைகளுக்கு முற்று புள்ளி வைத்து அனைவருக்கும் நாட்டுரிமை வழங்கினார்.

இன்றைய ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் தலைமையிலான ஆட்சியில் பெருந்தோட்டதுறை மக்களினது காணியுரிமையற்ற சொந்த வீடற்ற அனைவருக்கும் முற்றுப்புள்;ளி வைத்து அவர்களையும் இந்நாட்டின் ஏனைய சமூகத்தினருக்கு சமமானவர்களாக உருவாக்கி அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கை தரத்தை வழங்க திடசங்கட்பம் பூண்டுள்ளது.
எனவே அரசின் எண்ணக்கருவை செயற்படுத்த கம்பனி நிறுவாகங்கள் தங்களுக்கிடையில் இப்பிரச்சினை தீர்வில் தங்களினது முழுமையான பங்களிபை வரவேற்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகுமென குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து விளக்கமளிக்கையில் பெருந்தோட்டதுறை அபிவிருத்திக்கும் இந்த அமைச்சின் உரிய பங்களிப்பினை வழங்கும் என்பதோடு பெருந்தோட்ட தேயிலை இறப்பர் கைத்தொழில் எதிர்நோக்குகின்ற பாரிய விலை சரிவிலிருந்து மீள்வதற்கும் சிறு தேயிலை; இறப்பர் தோட்டங்களுக்கு அரசினால் வழங்கப்படுகின்ற உத்தரவாத விலையை போன்று பெருந்தோட்டதுறை

பிரச்சனைகளையும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் அத்தொழில்த்துறையின் அபிவிருத்தியை விரிவுப்படுத்த தடையாகவுள்ள காரணிகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து பொருந்தோட்டத்துறை அமைச்சினூடாக உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அரசாங்கம் சிறு தோட்ட அபிவிருத்திக்கு வழங்குகின்ற சலுகைகள் பெருந்தோட்டத்துறைக்கு வழங்கப்படுவதில்லை. தேயிலை ஏற்றமதி மூலம் கிடைக்கின்ற வசெஸ் பெருந்தோட்டத்துறை கைத்தொழில் துறையும் பெருந்தோட்டத்துறை சமூகத்தினதும் முழுமையான அபிவிருத்திக்கு பெருந்தோட்டத்துறை அமைச்சும் அதே போன்று தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சும் இராஐங்க கல்வி அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உறுதியும் திடசங்கட்ப்;பமும் புண்டு நடல்லமுறையில் செயற்பட ஆரம்பித்துள்ளது.

இதைவிரும்பாத விசமிகள் ஒவ்வோருவருக்கிடையிலும் வேறுபாட்டினை உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்ற போதும் அவற்றை செவிமடுக்காது நாங்கள் இணைந்து செயற்படுவோம் என குறிப்பிட்டார்.

பெருந்தோட்டத்துறை காணி மற்றம்; வீடமைப்பு கொள்கை ஒன்றை உருவாக்க பெருந்தோட்ட கம்பனிகள் ஆதரித்துடன் எதிர்காலத்தில் பெருந்தோட்டத்துறை மக்களின் நிவாரண நலன்புரி செயற்திட்டங்கள் விருத்தி செய்வதற்கும் கிராம நகர மக்களுக்கு போன்று நிதியுதவிகளை ஒதுக்கி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

தோட்ட தொழில் வருமானத்ததை அதிகரிப்பதற்கு அம்மக்கள் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி செய்ய அரசு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வருமானம் தரகூடிய தேயிலை தொழில் வீழ்ச்சி ஏற்ப்பட்டடுள்ள பகுதியில் தற்போது தொழிற்படை பாதிக்காதவகையில் மாற்று செயல்கள் மேற்கொள்வதும் நில சீர்த்திருத்த ஆணைக்குழுவின் அனாவசியமான தலையீடுகளின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ள தேவையான சூழலை உருவாக்குவதும்.

பெருந்தோட்டத்துறைகளில் மீள் பயிர்செய்கையை ஊக்குவிக்க பெருந்தோட்டத்துறை குத்தகையை நீண்டகாலத்திற்கு பெருந்தோட்டத்துறை அமைச்சின் சார்பாக முன்வைக்கப்பட்டதுடன் பெருந்தோட்ட வீடமைப்புகளை துரிதப்படுத்த அதற்கு தேவையான காரணிகள் பெற்றுக்கொடுக்க தாங்கள் எந்த விதத்தில் தடையாக இருக்க போவதில்லை எனவும் தோட்ட மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த தோட்ட அதிகாரிகள் கடமை…
அமைச்சின் ஏற்பாடுகள் முழுமையான ஆதரவை தருவதாகவும் குறிப்பிட்டதுடன்.

பெருந்தோட்டத்துறை சார்ந்த 3 அமைச்சர்களும் இணைந்து ஒன்றாக ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட தாங்கள் மகிழ்ச்சியுறுவதாகவும் அச்செயல் முறை பெருந்தோட்டத்துறை மக்கள் அனைவரும் சமமான அபிவிருத்தி செயற்பாடுகளில் உள்ளடக்கப்பட ஏதுவாக உள்ளது எனவும் கூறினார் .

Related Post