Breaking
Tue. Mar 18th, 2025
கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று ஆசனங்களைக் கொண்ட பேருந்துகளை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இந்த விசாரணைகளுக்காக பிரதி மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் மற்றும் மத்திய போக்குவரத்துச் சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் பேருந்துகள் தூர பயணங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் எனவும் இனிமேல் இவ்வாறான பேருந்துளை இறக்குமதி செய்வது தடை செய்யப்படும் எனவும் பேருந்துகள் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர்  ரஞ்சித் வித்தானகே தெரிவித்துள்ளார்.

By

Related Post