Breaking
Tue. Dec 24th, 2024

மருதானை எல்பின்ஸ்ட்டன் பிரதேசத்தின் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து அப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.இந்த தீ விபத்தினால் மூவர் பலியானதாக பொலீஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இடம் பெற்று ஒரு சில நிமிடங்களுக்குள் அப்பிரதேசத்துக்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பாதிப்புக்குள்ளான கடைத் தொகுதியினை பார்வையிட்டதுடன்,

இது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொலீஸ் உயர் அதிகாரிகளிடத்தில் கேட்டுக்கொண்டார்.

இதே வேளை இந்த பிரதேசத்தில் தீ விபத்தையடுத்து வாகனப் போக்குவரத்து நெரிசல்களை காணக் கூடியதாக இருந்தது.

விபத்து தொடர்பில் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை பொலீஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Post