மூன்று தடவைகளுக்கு மேல் தவறுவிடும் தனியார் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் சேவை அடையாள அட்டையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனியார் போக்குவரத்து அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் செய்த முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகளின் பிரதான முறைப்பாடாக பஸ்கள் நேர தாமதத்தில் செல்கின்றமை, மிகுதி பணம் வழங்காமை மற்றும் பஸ்ஸுக்குள் அதிக சத்தத்துடன் பாடல் போடுதல் போன்றவை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பஸ்களில் ஜி.பி.எஸ் தொழிநுட்பம் பொருத்துதல் மற்றும் கமரா பொருத்துதல் குறித்து விரைந்து செயற்படவுள்ளதாக தனியார் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.