Breaking
Sun. Mar 16th, 2025

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் பழுதுபார்க்கும் பணிகளுக்காக அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து மூன்று மாதங்களுக்கு மூடப்படவுள்ளது என்று விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்பிரகாரம் 2017 ஜனவரி 6ஆம் திகதி முதல் 2017 ஏப்ரல் 6ஆம் திகதி வரை பகல் வேளைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரை மாத்திரம் விமான நிலையம் மூடப்படும்.

அந்தக் காலப் பகுதியில் சகல விமானங்களினதும் வருகைகளும் புறப்படல்களும் இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையம் இவ்வாறு மூடப்படுவது ஸ்ரீலங்கன் விமான சேவைக்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்று விமான நிலையத் தொழிற்சங்கங்கள் தமது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post