உதாரணத்துக்கு, காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதேநேரம், அதிகமாகச் சாப்பிடுவது, மூளையின் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்கு வழிவகுக்கும்.
புகை பிடிப்பது, மூளை சுருங்கவும், அல்சைமர் வியாதி ஏற்படவும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவது, புரதம் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்குப் பாதிப்பாகிறது.
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் மூளை பாதிப்படையும்.
நல்ல உறக்கம் இல்லாதபோது, மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. போதுமான அளவு தூங்காமல் இருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
தலையை மூடிக்கொண்டு தூங்கினால் போர்வைக்குள் கார்பன்-டை-ஆக்சைடு அதிகரிக்கும். சுவாசிக்கும் ஆக்சிஜன் அளவு குறையும்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் அதைப் பாதிக்கும். உடல்நிலை சரியான பிறகு மூளைக்கு வேலை கொடுப்பதே நல்லது.