Breaking
Sun. Dec 22nd, 2024
கடலில் நிர்க்கதியான புகலிடப் படகில் இருப்பவர்களுக்கிடையே எஞ்சிய உணவுக்காக ஏற்பட்ட சண்டையில் 100 பேர் வரை உயிரிழந்ததாக மூழ்கும் படகொன்றில் இருந்து உயிர் தப்பிய சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்கும் படகில் இருந்து மீட்கப்பட்ட மூவர், படகில் இருந்த பலரும் கத்தியால் குத்தப்பட்டோ, தூக்கில் தொங்கவிடப் பட்டோ அல்லது கடலில் வீசி எறியப் பட்டோ கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளனர்.
மியன்மார், பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த சுமார் 700 புகலிடக் கோரிக்கை யாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷிய அதிகாரிகளால் மீட்கப்பட்டனர். இவர்கள் மலேஷியாவில் தரையிறங்க விரும்பிய போதும் மலேஷிய கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களை அழைத்து வந்த ஆட்கடத்தல்காரர்கள் நடுக் கடலில் கைவிட்டுச் சென்ற நிலையில் இந்த படகு கடந்த இரண்டு மாதங்களாக கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கையில் இந்தோ னேஷிய மீனவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இவர்களை காப்பாற்றியுள்ளனர்.
உயிர் தப்பியவர்கள் தற்போது இந்தோ னேஷியாவின் அசே தீவுப் பகுதியில் சேமிப்பு கிடங்கொன்றில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலா னவர்கள் உடல் வறட்சி மற்றும் ஊட்டச் சத்து இன்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதில் பங்களாதேஷின் பங்காளி இனத்தினருக்கும் மியன்மார் ரொஹிங்கியா இனத்தினருக்கும் இடையிலேயே உணவுக்காக படகில் சண்டை நிகழ்ந்துள்ளது.
“சண்டைகள் இடம்பெற்றது உண் மைதான்” என்று 24 வயது ஷ¤ குதாரா என்ற ரொஹிங்கியா இனப் பெண் உறுதி செய்துள்ளார். “அவர்கள் ஆட்களை வெட்டினார்கள். கழுத்தை அறுத்தார்கள்” என்றும் அவர் கூறினார்.
ரொஹிங்கியாக்களின் உணவை பெறுவதற்கு பங்காளிகள் கத்திகள் மற்றும் சுத்தியல்கள் கொண்டு தாக்கியதாக முஹமது ரபீக் என்பவர் குறிப்பிட்டுள்ளார். ரொஹிங்கியாக்கள் தம்மிடம் இருக்கும் உணவை பகிர்ந்துகொள்வதை மறுத்ததாகவும் ரபீக் குற்றம்சாட்டினார்.
இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கூறும் தகவல்களில் உள்ள உண்மைத் தன்மை பற்றி உறுதிசெய்ய முடியவில்லை. எனினும் அவர்களின் கதைகள் ஏனைய ஊடகச் செய்திகளுடன் பொருந்திப் போவதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
நடுக்கடலில் நிர்க்கதியாகி இருக்கும் தஞ்சப்படகில் இருப்போர் மூழ்கும் நிலை ஏற்பட்டாலும் அவர்களை காப்பாற்ற வேண்டாம் என்று இந்தோனே’pய மீன வர்களை அந்நாட்டு அதிகாரிகள் அறிவு றுத்தியுள்ளனர்.
அசே கடலில் தத்தளித்துக் கொண்டி ருந்த சுமார் 700 பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ரொஹிங்கியாக்களை இந்தோ னே’pய மீனவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை மீட்டு நாட்டுக்கு அழைத்து வந்தனர். இதனால் அங்கு முகாம்களில் அடைக்கலம் பெற்றிருப்போர் எண்ணிக்கை 1,500ஐ எட்டியுள்ளது.
எந்தவொரு புகலிடக்கோரிக்கையா ளரும் கரையொதுங்குவது சட்டவிரோத மானது என்று இந்தோனே’pய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கடலில் தத்தளித்துக் கொண் டிருக்கும் தஞ்சப் படகுகளுக்கு எதிராக பிராந்தியத்தில் இருக்கும் அனைத்து நாடுகளும் தனது எல்லைகளை மூடியுள்ளன.
மியன்மாரில் வன்முறை மற்றும் வறுமைக்கு முகம் கொடுத்த ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம் களே இந்த படகுகளில் உள்ளனர். தவிர பொருளாதார நலனுக்காக பங்களாதே’pயரும் தஞ்சம் கோரி வந்துள்ளனர்.
இவ்வாறு தத்தளிக்கும் படகுகளில் உள்ள பெரும்பாலா னவர்கள் ஊட்டச்சத்து இல்லாத நிலையில் அவரச உத வியை எதிர்பார்த்தவர்களாக உள்ளதாக தொண்டு அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. உணவுக்காக படகுகளில் கடும் சண்டையும் இடம்பெறுவதாக உயிர் தப்பியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தஞ்சப்படகுகள் உள்ளே நுழையாமல் இருக்க மலே’pயா தனது வட மேற்கு கடல் எல்லையை முடக் கியுள்ளது. படகில் இருப்பவர்கள் பட்டினி மற்றும் நோய் களால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் தாய்லாந்து தனது எல்லைக்குள் வரும் படகுகளை சீர்செய்து திருப்பி அனுப்பி வருகிறது.
இந்நிலையில் இந்த தஞ்சக்கோரிக்கையாளர்களை காப் பாற்றி வரும் இந்தோனே’pய மீனவர்களையும் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. எல்லையை திறந்துவிட்டால் இந்த படகுகள் திரளாக வந்து குவியும் என்று பிராந்திய நாடுகள் அச்சப்படு கின்றன.
ரொஹிங்கியா முஸ்லிம்களை மோசமாக நடத்துவ தாலேயே இந்த பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக இந்த நாடு கள் மியன்மார் மீது குற்றம்சாட்டியபோதும் மியன்மார் அதனை ஏற்க மறுக்கிறது. எனினும் இதற்கு காரணம் யார் என்பதை தேடுவதை விடவும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை காப்பற்றுவதே முதல் வேலை யாகும் என்று வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
எவ்வாறாயினும் இந்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் மூழ்குவதை பார்த்தால் எச்சரிக்கையையும் மீறி அவர் களை காப்பாற்றுவதாக அசேவில் இருக்கும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
‘அவர்களும் மனிதர்கள் தான். அவர்களை காப்பாற்று வது எமது கடமையாகும்” என்று மீனவர் ஒருவர் பி.பி. சிக்கு குறிப்பிட்டுள்ளார்.
தஞ்சப்படகில் இருப்பவர்களுக்கு உணவு, எரிபொருள், குடிநீர் வழங்க மீனவர்களுக்கு அனுமதி உள்ளது. ஆனால் அவர்களை கரைக்கு அழைத்து வருவது இந் தோனே’pயாவிற்குள் சட்டவிரோதமாக அழைத்து வருவ தாக அமையும் என்று இராணுவ பேச்சாளர் புவாத் பஸ்யா எச்சரித்துள்ளார்.
இதனிடையே தஞ்சக் கோரிக்கையாளர்களை பராம ரிக்க தம்மிடம் நிதியில்லை என்றும் மத்திய அரசே நிதி தரவேண்டும் என்றும் இந்தோனே’pயாவின் லக்சா நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.
கடலில் தத்தளிப்பவர்களுக்கு பிராந்திய நாடுகள் அனைத்து உதவிகள் மற்றும் அடைக்கலம் வழங்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

Related Post