Breaking
Fri. Dec 27th, 2024
கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மெகசின் சிறைச்சாலை மற்றும் வெளிக்கடை சிறைச்சாலைகளுக்கான பிரதான வாயில் முற்றாக மூடப்பட்டுள்ளதோடு எந்தவொரு வாகனமும் அதனூடாக பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார்.

சில நாசகார கும்பல்கள் சிறைச்சாலைக்குள் அத்துமீறி புகுந்து குழப்பநிலையை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டமைக்கான காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்த ஞானசாரதேரருக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post