Breaking
Sat. Jan 11th, 2025
மெகா பொலிஸ் அபிவிருத்தி செயற்திட்ட முன்னெடுப்புகளின் போது எந்தவொரு கொம்பனும் தலையிட முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மெகா பொலிஸ் அபிவிருத்தித் திட்டமானது நாட்டின் எதிர்கால நலனை உத்தேசித்து முன்னெடுக்கப்படும் ஒரு முக்கிய செயற்திட்டமாகும். இதன்போது ஒருசிலருக்கு சிற்சிறு பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

எனினும் அமைச்சுப் பதவிகள், பணபலம், ஊடகப் பின்புலம் என்பவற்றைக் கொண்டு யாரேனும் இச்செயற்திட்டத்திற்கு தடை போட முயன்றால் அவர்கள் தோற்றுப் போய்விடுவார்கள். எந்தவொரு அழுத்தத்துக்கும் அடிபணிய நான் தயாரில்லை.

அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகிப்பதன் காரணமாக ஒருசிலர் தங்களுடைய காணிகள் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திற்காகவும் சுவீகரிக்கப்படக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும். அதில் யாருக்கும் விலக்கு அளிக்க முடியாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மெகா பொலிஸ் அபிவிருத்தித் திட்டத்தின் கீழான வேரெஸ்கங்க அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அமைச்சர்களான தயா கமகே மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையில் கருத்து மோதல் ஒன்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

By

Related Post