இளவயதான பாடசாலை மாணவியை வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் மேசனைக் குற்றவாளியாக இனங்கண்ட அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கேமா சுவர்ணாதிபதி, அவருக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர், மேல் நீதிமன்றத்துக்கு வருகைதராமல், நீதிமன்றுக்குள் செல்வதைத் தவிர்த்து தப்பியோடிவிட்டார்.
இதுதொடர்பில், நீதிமன்ற பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
அதன்பின்னர், குற்றவாளிக்கு 20 வருட கடூழிய சிறைதண்டனை விதித்த மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளியை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியூடாக பிடிவிறாந்தும் பிறப்பித்தார்.
வழக்கின் குற்றவாளியான அநுராதபுரம் பாலாடித்தன குளத்தைச்சேர்ந்தவர், இந்தக் குற்றத்தை 2004ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 27ஆம் திகதியோ அல்லது அதற்கு அண்மித்த திகதியிலோ புரிந்துள்ளார்.