சுலைமான் றாபி
மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ஏ.எச்.டி.நவாஸிற்கு அவரது சொந்த ஊரான நிந்தவூரில் பாராட்டி கௌரவிக்கும் “மண்ணிண் மகுடம்” எனும் கௌரவிப்பு விழா இன்று (07.10.2014) செவ்வாய்க்கிழமை பி.ப. 4.00 மணிக்கு நிந்தவூர் ஜும்ஆபள்ளிவாசல் சதுக்கத்தில் இடம்பெற்றது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் எச்.எம். அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி. ஹசன் அலி, பைசால் காசிம், மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர், உப தவிசாளர் எம்.எம்.எம். அன்சார், எதிர்க்கட்சித் தலைவர் வை.எல். சுலைமாலெவ்வை, பிரதேச சபை உறுப்பினர்கள், நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ், சட்டத்தரணிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி யூ.எல். யாக்கூப், கல்விமான்கள், ஜூம்மா பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளால் பொன்னாடை போர்த்தியும், ஞாபகச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.