Breaking
Sun. Sep 22nd, 2024
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மனோஜ் மாலக சில்வா தாம் இரவு கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றம் விடுத்திருந்த தடையுத்தரவை நீக்குமாறு கோரியிருந்த மனு நீதிமன்றத்தினால் மீண்டும் நேற்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று 18ம் திகதி கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதி நிசாந்த பீரிஸ் மாவட்ட சில்வாவின் மனுவை மீண்டும் நிராகரித்துள்ளார்.

பம்பலப்பிட்டி இரவு கேளிக்கை விடுதியொன்றிலிருந்து பிரிட்டன் யுவதியொருவரை கடத்திய சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நேற்று நீதிபதி இதனை அறிவித்தார்.

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியதுடன் மாலக சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசேல மாலக சில்வா மீதான மேற்படி தடையை நீக்குமாறும் அல்லது அந்த நிபந்தனையை சற்று இலகுபடுத்துமாறும் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது சந்தேக நபர் தற்போது பிணையில் இருப்பதாக் குறி்ப்பிட்ட நீதிபதி, இந்த நிலையில் நிபந்தனையை இலகுபடுத்தினால் மீண்டும் இது போன்றதொரு சம்பவம் இடம்பெற்றால் அது பாதிப்பாக அமையும் எனவும் தெரிவித்தார்.

By

Related Post