Breaking
Thu. Jan 16th, 2025

மேற்குலக நாடுகள் மீண்டும் சூழ்ச்சித் திட்டங்களை தீட்டத் தொடங்கியுள்ளதாக இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.விரைவில் ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் அதைப் பற்றி பேசுவதற்காக வரவில்லை. நாட்டுக்கு எதிராக உள்நாட்டு, வெளிநாட்டு சூழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.மேற்குலக நாடுகள் இலங்கையை சிக்க வைக்க பல தடவைகள் முயற்சித்தன.ஒன்றும் சரிவரவில்லை. தற்போது மீண்டும் இறுதி முயற்சியாக இலங்கை நெருக்கடிக்குள் ஆழ்த்தும் சதித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.நாட்டை பாதுகாக்கும் நீல மதில் சுவராக நாம் இருக்க வேண்டும். போரின் இறுதிக் காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலி தலைவர்களை பாதுகாக்க மேற்குலக நாடுகள் முயற்சித்தன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.வெள்ளைக்கொடி ஏந்தி வரும் நபர்களை வெளியேற அனுமதிக்குமாறு கோரியிருந்தன. ஜனாதிபதி மேற்குலக நாடுகளுக்கு அடிபணியாத காரணத்தினால் நாட்டை சிக்க வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.2005ம் ஆண்டு தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோற்றுவிடுவார் என்ற பலரும் நம்பினர். மேற்குலக நாடுகள் பல கோடி ரூபா செலவழித்து ரணில் விக்ரமசிங்கவை வெற்றியீட்டச் திட்டங்கள் செய்தன.அப்போதைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியும் மஹிந்தவை தோற்கடிக்க முயற்சித்தார். மஹிந்த வந்தால் போர் என்றே எதிர்க்கட்சிகளும் பிரச்சாரம் செய்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post