அன்று 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் மாகாண சபைகளின் பெரும்பாலான அதிகாரங்களைகளை கொடுத்துவிட்டு இன்று மீண்டும் எஞ்சியுள்ள மாகாண சபையின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு தாரைவார்த்து கொடுத்து மாகாணசபைகளின் தரங்களை மாநகரசபை அல்லது பிரதேசசபையின் தரத்திற்கு தரந்தாழ்த்த எடுக்கும் இந்த 20வது திருத்த சட்ட மூலத்தை நாங்கள் ஆதரிக்க போவதில்லை என மேல் மாகாணசபை உறுப்பினர் முஹம்மட் பாயிஸ் மேல்மாகாண சபையில் நடைபெற்ற 20வது திருத்தச்சட்ட மூலத்தின் மீதான விவாதின் போது மிகத்தெழிவாகவும் ஆடித்தனமாகவும் எடுத்துரைத்தார்.
அது மாத்திரமன்றி நாங்கள் ‘யாகபாலன’ ஆட்சியின் பங்காளர்களாக இருந்தாலும் பிழையை பிழை எனவும், சரியை சரி எனவும் உரத்த குரலில் எடுத்துரைக்கும் கட்சியாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் வழிகாட்டுதலில் அதன் அனைத்து பாராளுமன்ற, மாகாண, மாநகர, பிரதேச சபை உறுப்பினர்களும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார்.