Breaking
Sat. Jan 11th, 2025

– றிஹாம் –

மேல் மாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட நாடகப்போட்டி  இரத்மலானை கொழும்பு இந்துக் கல்லூரியில்  உயர் கல்வி அதிகாரி ஒருவரின் தலைமையில் நேற்று  நடைபெற்றது. குறித்த இப்போட்டி நிகழ்ச்சியில் 07 பாடசாலைகள் பங்கு பற்றின. அதில் இரண்டு பாடசாலைகள் முஸ்லிம் பாடசாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்  நிகழ்ச்சிகள் அனைத்தும்  குறித்த பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றபோதும் அம்மண்டபத்தின் அனைத்து நுழைவாயில்கள், ஜன்னல்கள் குறித்த  கல்வி அதிகாரியினால்  மூடப்பட்டன.​ அத்தோடு மூடிய அறையில் அரங்கேற்றப்பட்ட நிகழ்சிக்கு பங்குபற்றும் மாணவர்கள்  மாத்திரமே அனுமதிக்கப்பட்தோடு, அப்போட்டிகளில்  பங்கேற்க வந்த ஏனைய பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் பலவந்தமாக குறித்த கல்வி அதிகாரியால்  வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆக அங்கு என்ன நடந்தது என்பது பற்றி சக மாணவர்களோ ஆசிரியர்களோ  அறிந்திருக்கவில்லை. தமது குழுவின் நிகழ்ச்சியைத் தவிர ஏனைய  குழுக்களின் நிகழ்ச்சிகளை பார்க்க மாணவர்களோ ஆசிரியர்களோ அனுமதிக்கப் பட்டிருக்கவில்லை.

அதேபோன்று குறித்த நிகழ்வுக்காக அழைக்கப்பட்ட  நடுவர்கள் ஐந்து பேரும் ஓர் இனத்தை, சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர் என்பதுடன் அதில் ஒருவர் குறித்த போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட பாடசாலையின் ஆசிரியருமாவார். இப்போட்டி முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்ட அடிப்படையில் அமைந்தனவா என கேள்விகள் எழுகின்றன.

எனவே இந்தப் போட்டியானது குறித்த கல்வி அதிகாரியினால்  திட்டமிட்டு நடாத்தப்பட்டதோடு, இது அவர்  தொடர்ந்தேர்ச்சியாக  முஸ்லிம்களை புறக்கணிக்கும்  ஈனச் செயலின் ஓர் அங்கமாகும்  என்பது தெட்டத் தெளிவாகின்றது. இதனால் குறித்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய முஸ்லிம் மாணவர்கள் மட்டுமன்றி  ஆசிரியர்களும்  மன உளைச்சலுக்குள்ளாகி வேதனையடைந்துள்ளனர்.

எனவே முஸ்லிம் கல்வியியலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அனைவரும் இதில் தலையிட்டு குறித்த நிகழ்ச்சியை முற்றுமுழுதாக மீண்டும் திறந்த வெளியில் நடாத்தப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுக்க வேண்டும். அதேபோன்று குறித்த அதிகாரிக்கெதிராக இது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த அதிகாரி முஸ்லிம்களின் கல்வி நடவடிக்கைகளில் பல வருடங்களாக துவேஷம் காட்டி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களுக்கெதிரான இவரது விரோதச் செயற்பாடுகள் அனைத்தும் ஆவணங்களாக வெகுவிரைவில் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென்று  பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

நன்றி – mn

Related Post