மே தினக் கூட்ட பாதுகாப்பு பணிகளில் 5000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மே தினக் கூட்டங்கள் மற்றும் மே தின பேரணிகள் போன்றவற்றுக்கான பாதுகாப்பிற்காக இவ்வாறு 5000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நடைபெறும் மே தினக் கூட்டங்களுக்காக 3100 பொலிஸ் உத்தியோகத்தர்களும், மோட்டார் போக்குவரத்து கடமைகளுக்காக 1900 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
மே தினக் கூட்டங்களின் போது குழப்ப நிலைமைகள் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த கலகத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நேரடிக் கண்காணிப்பில் மே தினக் கூட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.