பல்கலைக்கழக மாணவர்களுக்கான அதிகரிக்கப்பட்ட ரூபா 5000 மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண் டே மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலி திட்டங்களை முன்னெடுத்தாரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத் முதலியின் 22ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு றோயல் கல்லூரிக்கு முன்பாகவுள்ள தூபி அருகில் நடைபெற்ற லலித் அத் துலத்முதலியின் நினைவு தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரவிக்கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் மேம்பாட்டுக்காகவும் நாட்டின் நன்மைக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் திட்டமிட்டு செயலாற்றியவர் லலித் அத்துலத்முதலி அவரின் திட்டங்களால் உயர்வு தாழ்வு என்ற பாகு பாடில்லாமல் திறமையுள்ள மாணவர்கள் அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வியை தொடர்வற்கு மஹாபொல புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட் டது. இவ்வாறான அரசியல் தலைவர்கள் அரசியலுக்கு முன்னுதாரணர்கள்.
நிதியமைச்சராக பதவியேற்றவுடன் மஹாபொல புலமைப்பரிசில் தொகையை ரூபா 5000 ஆக அதிகரிக்க கிடைத்தமை நான் பெற்ற பாக்கியமாகும்.இவ் அதிகரிக்கப்பட்ட ரூபா 5000 எதிர் வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து வழங்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித் தார்.